A Short family trip to Europe
ஐரோப்பா அன்புடன் அழைத்தது. (பாகம் 1)
Disclaimer: இந்த பதிவில் இடம்பெறும் எந்த ஒரு நிகழ்வும், யார் மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல. மாறாக, பகிரப்பட்ட தகவல்கள், தேவைப்படுவோர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலேயே சுவாரசியமாக பகிரப்பட்டவையே.
1973 ல் திரையிடப்பட்ட "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் மக்கள் திலகம் MGR சிவப்பு தொப்பி அணிந்து உலகம், உலகம் அழகு கலைகளின் சுரங்கம் என்று கையை உயர்த்தி வான் உயர்ந்த கட்டிடங்களை காட்டியும் கை அசைத்து ஆடி, பாடியதை பார்த்த நொடி முதலே, என்றாவது ஒரு நாள் இந்த உலகை சுற்றி வலம் வரும் ஆசை தொற்றி கொண்டது. அந்த காலத்தில் அதற்கு பேராசை என்று பெயர். அதில் இருந்து பேர் மட்டும் நீக்கி ஆசையாக மாற்றுவதற்குள் வருடங்கள் முப்பது உருண்டு ஓடின.
2003 ம் வருடத்தில் கண் முன் வந்த வாய்ப்பு கானல் நீராய் கரைந்து போனது பெரும் வேதனையை தந்தது. விதியோ, சதியோ, வாய்ப்பு நழுவியதே நிதர்சனம்.
ஆசையை, திட்டமாக பதவி உயர்த்த மேலும் இருபது ஆண்டுகள் தேவைப்பட்டது.
எப்படி?
என் மகனுடைய கல்வி முடிவு பெற்று பட்டம் பெரும் தருணம் 2023 ல் அரங்கேற, திட்டம் வலுப்பெற்றது.
இனி வரும் பாகங்களில், திட்டங்களும், அனுபவங்களும் பகிர்வு பெறப்போகிறது.
(தொடரும்)
Comments
Post a Comment