Posts

Showing posts from August, 2023
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-23 ) மண் பயனுற வேண்டும்!!! பஞ்சாபி ஹோட்டலில் இரவு உணவை முடித்துக்கொண்டு நாங்கள் செல்லவேண்டிய 'ஏர் பீ என் பீ' விடுதியான வீட்டிற்கு டிராம் பிடித்து சென்றோம். அது என்ன 'ஏர் பீ என் பீ' என்று கேட்கிடீர்களா? இது ஒருவகையான பயணிகள் தங்கும் விடுதி என்றே கூறலாம். இது போன்ற வசதிகள் இப்போது இந்தியாவில் கூட வந்து விட்டது. அதாவது, சில பணவசதி படைத்தவர்கள், தனக்கு சொந்தமான வீட்டை, சகல வசதிகளையும் செய்து கொடுத்து வாடகைக்கு விடுவதுதான் 'ஏர் பீ என் பீ'. இந்த வீடுகள், நாள் வாடகை தொடங்கி, மாத வாடகை வரை கிடைக்கும். இந்த வீட்டை கிட்ட தட்ட நம் சொந்த வீட்டை போன்றே பயன்படுத்தலாம். மளிகை சாமான்களை வாங்கி கொண்டு சமையல் செய்து சாப்பிடலாம், துணி மணிகளை துவைத்து காய போடலாம், இல்லாவிட்டால் என்னை போன்ற சோம்பேறிகள், சும்மா தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்தலாம். வாடகையில் பெரிய வித்தியாசம் இருக்காது, ஆனால், ஹோட்டலில் உள்ள கூட்டம் இருக்காது.  இங்கு ஒரு தகவல். ஏர் பீ என் பீயை ஆன்லைனில், பதிவு செய்யும்போது, அந்த வலைத்தளம் நேர்மையானது தானா? என்று தெரிந்து கொண்டு பதிவு செய்யவேண்
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-22 ) தரணியிலே பெருமை வேண்டும்!!! அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய நாடு ஆஸ்திரியா. ஆஸ்திரியா பல அதிசயங்களை, ரகசியமாக தன்னுள் வைத்திருக்கும் மிகவும் அழகிய நாடு. இதன் தலைநகரம் வியன்னா. இதுவும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. நிறைய நோபல் லாரெட்டுகளை உருவாக்கிய நாடுகளில் இதுவும் ஒன்று. 22 நோபல் பரிசுகளை பெற்று இருக்கிறது. வரலாறுகள் நிறைந்து காணப்படும் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவுக்கு போவதற்காக, காலை 11 :30 க்கு ரயிலை பிடித்தோம். வியன்னாவுக்கு நேரடியாக செல்லும் ரயில் கிடைக்காததால், ஜெர்மனியின் 'மூனிக்' (Munich ) வரை சென்று அங்கிருந்து வியன்னாவுக்கு ரயில் மாற வேண்டும். இடையில் அரை மணி நேர இடைவெளி. மொத்த பயண நேரம் எட்டு மணி. ஆனால், என்ன சோதனையோ நாங்கள் சென்ற ரயில், ஆங்காங்கே நின்று நின்று சென்றது. பிறகுதான் தெரிந்தது, ஜெர்மனியில் ரயில் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருவதாகவும், அதனால் ரயில்கள் குறித்த நேரத்தை கடை பிடிப்பது இல்லை என்ற தகவல்கள். ஒன்றரை மணிக்கு மூனிக்குக்கு வந்து சேர வேண்டிய ரயில் சரியாக அரை மணி நேரம் தாமதமாக வந்தது.
Image
 ஐரோப்பா அழைத்தது  (பாகம்-21) தனமும் இன்பமும் வேண்டும் !!! சுவிட்சர்லாந்தின் பிரபலமான பொருட்களில் ஒன்று கை கடிகாரம். கடைவீதியில் எங்கு பார்த்தாலும் கை கடிகாரக்கடைகள் பார்க்க முடிந்தது. 'ரோலெக்ஸ், போஸ், ஒமேகா, டிஸ்ஸோட்' என்று பல வகையான விலையுயர்ந்த கை  கடிகாரங்கள், அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. "சரி, வந்ததுதான் வந்தோம், உள்ளே நுழைந்து பார்த்து விடலாமென்று ஒரு கடையின் உள்ளே சென்று நோட்டம் விட்டோம்.  இங்கு ஒரு முக்கிய தகவல். கடைகள் காலை பத்து மணிக்கு மேலே தான் திறப்பார்கள், இரவு எட்டு மணிக்கு மூடிவிடுகிறார்கள். கவுண்டமணி சின்னத்தம்பி படத்தில் சொல்வதுபோல எட்டு மணிக்கு மேல்  'கோடி ருபாய்' கொடுத்தால்கூட திறக்க மாட்டார்கள். இன்னும் ஒரு ஒரு முக்கிய தகவல். சுவிட்சர்லாந்தின் தேசிய நாணயம் 'சுவிஸ் பிராங்க்', 'யூரோ' அல்ல. ஆகவே, கொஞ்சம் செலவுக்கு சுவிஸ் பிராங்க் வைத்து கொள்வது நல்லது.  நான், என் மகனுக்கு ஒரு கை கடிகாரம் வாங்கி பரிசளிக்க முடிவு செய்திருந்தேன். அதன்படி, அவருக்கு பிடித்த 'போஸ்' கை கடிகாரத்தை வாங்கி கொடுத்து மகிழ்ந்தேன். அந்த கடிகாரத்தை சுவிட்சர்
Image
  ஐரோப்பா அழைத்தது (பாகம்-20 ) பெரிய கடவுள் காக்க வேண்டும்!!! ஈஸி ஹோட்டலில் கஷ்டப்பட்டு உள்ளே சென்று எங்கள் அறையை கண்டு பிடித்து உள்ளே சென்றோம். பிறகு மற்றவையெல்லாம் சுமுகமாகவே நடந்தேறியது. அன்று ஞாயிற்று கிழமையானதால், நிறைய கடைகள் மூடியே இருந்தன. மாலை வேளை ஆனதும், ஸ்வட்டரை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பி வந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து சற்று தொலைவில் ஒரு கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. அதன் மேலிருந்த பாலத்தில் நின்று கொண்டு சுற்றி நோட்டம் விட்டபோது, நிரம்பி வழியும் அந்த கால்வாயின் கரையில் ஒரு திருவிழா கூட்டம் போல தெரியவே, அங்கு செல்லலாம் என்று முடிவெடுத்து நடைப்போட்டோம். அந்த திருவிழாக்கூட்டம் பெரும்பாலும், இளவட்டங்கள் கூட்டமாகவே இருந்தது. அது ஒரு நீச்சல் பயிற்சி செய்யும் இடமாகவும், ஸ்கேட் பலகை விளையாட்டு பயிலும் இடமாகவும் இருந்தது. மறுபக்கம் இருந்த சிறிய மைதானம் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. ஆங்காங்கே, சில ஆப்பிரிக்க இளைஞர்கள் கையில் புகை பொருளை வைத்துக்கொண்டு புகைத்து கொண்டும், நடமாடிக்கொண்டும் இருந்தார்கள். அவர்களை நெருங்கிய மற்ற சில இளைஞர்களும், இளைஞிகளும் புகை பொருளை
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-20 ) பெரிய கடவுள் காக்க வேண்டும்!!! சுவிட்சர்லாந்தும் இரு வேறு கலாச்சாரக்கலவை. ஜெனீவா நகரம் பிரெஞ்சு கலாச்சாரத்தையும், சூரிக் ஜெர்மானிய கலாச்சாரத்தையும் கொண்டுள்ளன. புழக்கத்திலுள்ள மொழியும் அப்படித்தான்.  ஜெனீவாவில் டிராம், பேருந்து மற்றும் ரயில் பயணத்தின்போது, 'அடுத்த நிறுத்தம்' என்பதை, 'ப்ரோஷனே அர்ரேட்' என்று பிரெஞ்சு மொழியிலும், 'சூரிக்'இல் 'நேஷ்ட்டே ஸ்டேஷன்' என்று ஜெர்மனிலும் ஒலிப்பார்கள். ஆக, ஒரே நாடுதான் என்று கவனமில்லாமல் இருந்தால் அதோகதி தான்.  ஜெனீவாவிலிருந்து சூரிக் மூன்று மணிநேர ரயில் பயணம். சுவிட்சர்லாந்தின் டபுள் டெக்கர் ரயிலில் காலை 9 மணிக்கு ஏறி மதிய உணவுக்கு சூரிக் சென்று விட்டோம். வழியில் லூசன், பெர்ன் போன்ற அழகிய நகரங்களும், ஆல்ப்ஸ் மலைச்சாரலும் நம்மை தொடர்ந்து வந்தன. ஆங்காங்கே குதிரை லாயங்கள், ஜெர்சி பசுக்களின் பட்டிகள், வயல் வெளிகள், ஜெனீவா ஏரியின் கரையோரம் என கண்களுக்கு குளிர்ச்சியான விருந்துதான். 12  மணிக்கு சூரிக் வந்து சேர்ந்தாகிவிட்டது. சூரிக் hbf என்பதுதான் சென்ட்ரல் ரயில் நிலையம். ஆகவே அங்கிருந்து தான்
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-19 ) வானகம் இங்கே தென்பட வேண்டும்!!! ஜெனீவா, சுவிட்சர்லாந்தில் உள்ளது, 'மாண்ட் பிளாங்க்' சிகரம், பிரான்சில் உள்ளது. ஆக, மீண்டும் பிரான்ஸை தொட்டாக வேண்டும். ஆனால் வேறு ஒரு பாதை வழியாக. அதுதான் ஜெனீவா ஏரியின் கரை ஓரமாகவே உள்ள 'லூசெர்ன்' (Lucerne ), மற்றும் 'கேமோனி' (Chamonix ) போன்ற சிறுநகரங்களை இணைக்கும் பாதை. இந்த இரண்டு சிறுநகரங்களுமே கொள்ளை அழகு படைத்தவை. ஒருபுறம், நிரம்பி இருக்கும் ஏரி, மறுபுறம் வயல், திராட்சை தோட்டங்கள், மற்றும் pine மரக்காடுகள். பின்புறம், ஆல்ப்ஸ் மலைத்தொடர். கண்ணை மூடிக்கொண்டு இந்த காட்சியை அனுபவித்து விட்டு, தொடர்ந்து படியுங்கள்.  இந்த மாண்ட் ப்ளாங் செல்வதற்காக பிரத்தியேக சுற்றுலா பேருந்துகள் உள்ளன. இல்லையென்றால், கேமோனி வரை பயணிகள் பேருந்தில் சென்று, அங்கிருந்து மலை ஏறும் கேபிள் கார் என்ற தொங்கு ரயிலை பிடிக்கலாம். ஆனால், தொங்கு ரயிலுக்கு முன் பதிவு அவசியம். சுற்றுலா காலத்தில் டிக்கெட் கிடைப்பது கடினம். ஆகவே, இந்த பயணத்துக்கு மட்டும் சுற்றுலா பேருந்தை முன்பதிவு செய்து கொள்வது சிறந்தது. தாங்கள் செலுத்தும் கட்டணத்தை
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-18 ) மண் பயனுற வேண்டும்!!! சுவிட்சர்லாந்து ஏன் மண்ணுலக சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது என்று கேட்டிருந்தேன். இந்த கேள்விக்கான விடையை, ரயிலில் ஜெனீவா நகரை நோக்கி செல்லும் பாதையின் இரு பக்கத்தை கவனித்தாலே தெரிந்து விடுகிறது. இருபுறமும், வினீயார்ட் என்று அழைக்கப்படும் திராட்சை தோட்டங்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதிலிருந்துதான் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய பானம், அதாவது wine தயாரிக்கப்படுகிறது. சுற்றிலும் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அணிவகுப்பு, நீண்டு செல்லும் ஐரோப்பாவின் மிக பெரிய ஏரி, (நீளம் 74 கிலோமீட்டர், அகலம் சுமார் 14 கிலோமீட்டர் (நமது வீராணம் ஏரி 12 கி.மீ. நீளம், 4 கி.மீ அகலம்) எப்போதும் நிரம்பி இருக்கிறது. தொடர்ந்து நிரம்பி இருக்க வேண்டுமென்றால், அது நமது செயல்பாடுகளில் இருக்கிறது. "கிளம்பிட்டாரு அட்வைஸ் ஆறுமுகம்" என்று நீங்கள் முணு முணுப்பது தெரிகிறது. சரி, விஷயத்துக்கு வருவோம். இந்த கண்கொள்ளா காட்சிகளினால் தான் அந்த நாடு மண்ணுலக சொர்க்கம் என்று பெயர் பெற்றுள்ளது. ரயில் ஜெனீவா ரயில் நிலையம் வந்து சேரும்போது மணி ஒன்றரை இருக்கலாம்.  வெளிப்புறம் வந
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-17 ) தரணியிலே பெருமை வேண்டும்!!! மீண்டும் இந்த பகுதியை ரயிலிலிருந்தே தொடங்குவோம். இந்த ரயிலின் பெயர் TGV எக்ஸ்பிரஸ். ஐரோப்பாவின் அதிவேக ரயில். தொலை தூர பயணத்துக்காகவே இதை உருவாக்கியிருக்கிறார்கள். அதிக பட்ச வேகமாக 320 கிலோ மீட்டரை தொடுகிறது இந்த ரயில். ஆனால் ஜெர்மனியின் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் இந்த வேகத்தை தொடுகிறது என்பதே நான் கண்டது. இந்த TGV அதிவேக ரயிலில் பயணிப்பதற்காகவே பாரிஸிலிருந்து ஜெனீவா வரை டிக்கெட் பதிவு செய்து இருந்தேன். ஜெனீவா, சுவிட்சர்லாந்தின் மிக முக்கிய நகரம். இந்த இடத்தை தேர்ந்து எடுத்ததற்கு காரணம் உள்ளது. அதை கூறும் முன்பு, ரயில் பயணத்தை பற்றி பார்த்து விடலாம்.  காலை, பத்தேகாலுக்கு பாரிஸ் நகரின் 'கரே டீ லயன்' ரயில்வே நிலையத்திலிருந்து கிளம்புகிறது அந்த TGV LYRIA எக்ஸ்பிரஸ் ரயில். அந்த ரயிலின் முக அமைப்பு, ஒரு விமானத்தின் முக அமைப்பை போலவே உள்ளது. காற்றின் தடுப்பு சுமையை குறைப்பதற்காக இப்படி வடிவமைத்துள்ளார். மற்றபடி ரயிலின் உள்ளமைப்பு, நமது 'வந்தே பாரத்' ரயிலைப்போலத்தான். இங்கு ஒரு முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-16 ) வானகம் இங்கு தென்பட வேண்டும்!!! பாரிஸ் மெட்ரோரயிலுக்கும், டெல்லி மெட்ரோரயிலுக்கும் இரண்டு ஒற்றுமைகள். வினாடி மாறாமல் குறித்த நேரத்தில் வருவது, எப்போதும் கூட்டமாக இருப்பது. நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம்.  மதிய உணவுக்காக (எது மதியம், எது மாலை என்று தெரியவில்லை) ஹோட்டலை தேடும்போது, 'சென்னை தோசா' என்று ஒரு ஹோட்டலை பார்த்ததும், உள்ளே நுழைந்து விட்டு நோட்டம் விட்டோம். பெரும்பாலும் சென்னை தமிழர்கள் தான். ஒரு இளம்பெண் அருகில் வந்து 'மெனு கார்டை' வைத்துவிட்டு போனார். விசாரித்ததில், கல்லூரியில் படிப்பதாகவும், பகுதி நேர வேலையில் அந்த ஹோட்டலில் இருப்பதாகவும் தெரிவித்தார். நம்மூரில், இவ்வாறு செய்வார்களா? என்றால், அப்படி ஒரு மாற்றம் இங்கும் வந்துகொண்டிருப்பதுதான் உண்மை.  மெனு கார்டில், பலவகையான தோசை வகைகளை கண்டபோது நாக்கு ஊறத்துவங்கியது. நான் ஒரு மசால் தோசையை ஆர்டர் செய்து, சுமார் 20 நிமிடம் காத்திருந்து பெற்றேன். சும்மா சொல்லக்கூடாது மிகவும் சுவையாகவே இருந்தது. ஆக, பாரிஸ் செல்லுபவர்கள் சாப்பாட்டு ராமர்களாக இருக்கலாம். வேண்டிய சாப்பாடு கிடைக்கும். சென்னை
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-15 ) பெண் விடுதலை வேண்டும்!!! LGBTQIA + என்றால் என்ன? என்று கேட்டிருந்தேன். பெரும்பாலாருக்கு தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு கூறுகிறேன். ஆண், பெண் என்ற இருபாலினங்கள் அனைவருக்கும் தெரியும். சில வருடங்களாக மூன்றாம் பாலினம் அரசியல் அமைப்பு சட்டத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. ஆக, இதிலிருந்து ஒன்று தெரிகிறது, அதாவது இரு பாலினம் கொண்ட மனித இனம்  மூன்றாவதும், மூன்று பாலினங்கள் பல பிரிவுகளாக மாறுவதும் சாத்தியமே. இவை யாவும், மனிதனின் உடல் தவிர, உணர்வு சம்மந்தப்பட்ட விஷயமே. ஆனால், சமுதாயம் இந்த பிரிவுகளை சரியாக பார்க்கிறதா? என்றால் அது கேள்விக்குரியதே. ஏனென்றால் மனித இனமே ஒரு பெருவாரி சமுதாய கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப்பழகி உள்ளது. ஆகையால், உணர்வு ரீதியான பிரிவுகளை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சிக்கல்களுக்கு விடை காண வேண்டி தற்போது பல அமைப்புகள் முன்வந்துள்ளன. வளர்ந்த நாடுகளை கொண்டுள்ள ஐரோப்பாவில், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த 'கிராண்ட் கார்மெஸ்'. LGBTQIA + பிரிவினருக்கா
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-14 ) தனமும் இன்பமும் வேண்டும்!!! ஹேகிலிருந்து பிரஸ்ஸல்ஸ், பிலிக்ஸ்பஸ் பேருந்தில் கிட்ட தட்ட மூன்று மணி நேர பயணம். இந்த பாதையில் பெரும்பாலும் கட்டிடங்களையே காண முடிந்தது. வயல், மரங்களை காணமுடியவில்லை. என்ன காரணம் என்றால் பெல்ஜியம் நான்கு நாடுகளை இணைக்கும் நாடு. மேற்புறத்தில், நெதர்லாந்து, கீழ்ப்புறத்தில் பிரான்ஸ், வலது  புறத்தில் ஜெர்மனி மற்றும் லுக்ஸம்போர்க். ஆதலால், இந்த நாட்டுக்கென்று தனியான கலாச்சாரத்தை காண முடியாது. டச்சு, பிரென்ச், ஜெர்மானிய கலாச்சாரத்தின் கலப்பு உள்ளது. மிகவும் பணக்கார நாடான பெல்ஜியத்தில், வைரம், கண்ணாடி வகைகள், முக்கியமாக சாக்கலேட் வகைகள் ரொம்ப பிரபலம். பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியத்தின் நடுப்பகுதியில் உள்ள முக்கிய நகரம். அந்நாட்டின் தலைநகரம். ஒவ்வொரு கட்டிடத்திலும், காசைக்கொட்டி தீர்த்திருக்கிறார்கள். அவ்வளவு பிரம்மாண்டம். தரைக்கு கீழே மெட்ரோரயில்கள் செல்லும். தரையில் பேருந்துகள், டிராம்கள் செல்லும். மெட்ரோரயிலை பிடித்து நாங்கள் தங்க வேண்டிய 'டு காங்கிரஸ்' ஹோட்டலுக்கு சென்று கையில் இருந்த பெட்டிகளை வைத்துவிட்டு 'சாக்லேட் மியூசியம்'