Posts

Showing posts from February, 2010

சச்சின் - ஒரு சகாப்தம்

Image
பலமான தென் ஆப்பிரிக்காவுற்கு எதிராக குவாலியரில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் ஒரு சரித்திரம் படைத்திருக்கிறார் சச்சின். ஒரு நாள் கிரிக்கட் வரலாற்றில் முதன் முறையாக இருநூறு ரன் என்ற சிகரத்தில் தடம் பதித்திருக்கிறார். வெறும் 147 பந்துகளில் அந்த சாதனையை செய்திருக்கிறார். இந்த போட்டியை பார்த்த அனைவரும் மீண்டும் இப்படி ஒரு ஆட்டத்தை காண பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வரின் முந்தைய சாதனையான 194 ரன்னை முறியடித்த சச்சினை அதே பதினைந்து வயது துள்ளலோடு இன்றும் பார்க்க முடிவதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம். கிரிக்கெட்டின் மீது அவர் கொண்டுள்ள அளவில்லாத பற்று அவரை மேலும் பல சாதனைகளை செய்ய தூண்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. வாழ்க சச்சின்.

A Powerful Video

தேயும் தேசிய விலங்கு (கெளரவம்)

Image
எனக்கு பத்து வயது இருக்கும். என்னையும், என் சகோதரியையும் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு திருச்சி ஜங்க்ஷன் மைதானத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த "ஜெமினி" சர்க்கசுக்கு சென்றார் என் அப்பா. அந்த பசுமையான நினைவு இன்று T.V செய்தி ஒன்றை கேட்டவுடன் வந்தது. அதற்கும் டி.வீ செய்திக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. அந்த சர்க்கஸில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் என்ன தெரியுமா? மிகச்சிறிய முக்காலியில் தன் நான்கு கால்களையும் நெருக்கி வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்த கண்களை கவரும் அந்த ஆறு புலிகள். நடுவில் நின்றிருந்த அந்த ஆசாமி கையிலிருந்த சாட்டையை சுழற்றியதும் தாவிப்பாய்ந்து நெருப்பு வலையத்திருக்குள் நுழைந்தன அந்த புலிகள். கம்பீரமான கர்ஜனையுடன் மீண்டும் முக்காலியில் நின்று கொண்டன. இன்னமும் மெய்சிலிர்க்கும் காட்சி. பிறகு பதினைந்து வருடங்களுக்கு பிறகு நண்பர்களுடன் மைசூர் மிருகக்காட்சி சாலையில் கூண்டுக்குள் அங்கும், இங்கும் ஆவேசமாக அலைந்து கொண்டிருந்த பெரிய வெள்ளைப் புலியைப் பார்க்கும் போதும் சிலிர்த்தது. புலி என்றாலே கம்பீரம் கலந்த அழகு. அதனால்தான் இந்தியாவின் தேசிய விலங்காக புலியை வைத்துள்ளார்க