Sachin finds no boundaries
உலக நாயகனே ! உலக நாயகனே !! சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் . இந்தியாவின் புகழை மீண்டும் உலக அரங்கில் உயர்த்தி இருக்கிறார் . கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் மிக அதிகமாக ரன் எடுத்து, லாராவின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த ஐந்தரை அடி எவெரெஸ்ட்டை Genius என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியுமா? சுமார் இருபத்து இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்து விளையாடுவது சாதாரணமான விஷயமா? பலத்த போட்டிகள் நிறைந்த சூழலில் தொடர்ந்து விளையாடுவதற்கு எவ்வளவு உடல் வலிமை வேண்டும், எவ்வளவு மன வலிமை வேண்டும், எவ்வளவு தன்னம்பிக்கை வேண்டும். போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் இடையில், எதிரணியின் ஆக்ரோஷத்துக்கு மத்தியில் நூறு மைல் வேகத்தில் வந்து தாக்கும் பந்துகளை பௌண்டரிக்கு அடிப்பது சாதாரண விஷயம் இல்லை. அப்படி என்றால் சாதனைப்பட்டியலில் இடம் பெறுவதுதான் இவருடைய நோக்கமா? இதற்கு பின்னால் எவ்வளவு முயற்சிகள், எத்தனை தியாகங்கள், எத்தனை போராட்டங்கள் இருந்திருக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்ற தீராத தாகமும், விளையாட்டின் மீது ஆழ்ந்த ஈடுபாடும், காதலும் இருந்தாலொழிய இது நிகழ முடியாது. "பசி நோக்க...