Posts

Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-25 ) உண்மை நின்றிட வேண்டும்!!! ஓம்! ஓம்! ஓம்! கடந்த 24 பாகங்களின் மூலம் என்னுடைய ஐரோப்பிய பயணத்தின் சில சுவையான, உபயோகமுள்ள அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். இந்த 25 வது பாகமானது இந்த உரையாடலின் கடைசி அத்தியாயம். இதில், வியானாவிலிருந்து மீண்டும், பிராங்கபார்ட் வந்த அனுபவமும், ஏற்கனவே கூறிய சில முக்கிய தகவல்களின் தொகுப்பும் தரவுள்ளேன். ஏர் பீ என் பீயை காலை செய்துவிட்டு மீண்டும் சாவியை அந்த பெட்டியிலே வைத்துவிட்டு மாலை ஐந்து மணிக்கே கிளம்பிவிட்டோம். ரயில் 10 மணிக்கு தான். அது வரை கையில் உள்ள பெட்டிகளை வைக்க ஒரு தனியார் சாமான்கள் வைக்கும் அறையை வாடகைக்கு எடுத்து, பொருட்களை வைத்து விட்டு, வியன்னா சாலையோர பஸாருக்கு சென்று 'டி' ஷர்ட்டுகள், பொம்மைகள், என்று சிலவற்றை வாங்கினோம். அங்கிருந்த பெரும்பாலான பொம்மைகளில் 'மொசார்ட் ' இசைகொண்ட சிறு சிறு இசைக்கருவிகள்தான் அதிகம். மொசார்ட் இசையை தனது அடையாளமாகவே கொண்டுள்ளார்கள் அந்த நாட்டினர். அந்த பஸாரில், பஞ்சாபை சேர்ந்த சிலர் கடைகள் வைத்துள்ளார்கள். தேவைப்பட்டவை எல்லாம் வாங்கி கொண்டு, வாடகைக்கு வைத்துவிட்ட
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-24 ) கண் திறந்திட வேண்டும்!!! முதலில் நாங்கள் தேர்வு செய்த இடம், ஷோம்பிருன் (Schonbrunn ) அரண்மனை. வியன்னா செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் இது முதன்மையானது. ஹாபிஸ்புர்க் ராஜ பரம்பரையின் வெயில்கால இருப்பிடம். இந்த பிரமாண்ட அரண்மனையின் சுற்றிலும் மிகப்பெரிய தோட்டமும் பூங்காவும் உள்ளது. குட்டையான மரத்தில் கொத்து, கொத்தாக ஆரஞ்சு பழங்கள் விளைந்துள்ளன. இந்த அரண்மனையில் உலக புகழ் பெற்ற மொசார்ட் (Mozart ) தன்னுடைய சிம்பொனியை இசைத்ததாக சொல்லப்படுகிறது. நமது இசைஞானி இளையராஜாவும் இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தாராம். அரண்மனையின் சிற்ப வேலைப்பாடுகள், என்னை பிரமிக்க வைத்தது. இரு தலை கொண்ட மனிதன், தன் காதலியோடு நடனமாடுவது போல இருந்த சிலை மிக அற்புதம்.  இங்கு ஒரு முக்கிய தகவல். வியன்னா சிட்டி டிக்கெட் வாங்கியவர்கள் தனி தனியாக டிக்கெட் வாங்க தேவை இல்லை. வியன்னா ஐரோப்பிய நாடுகளில் மிகவும் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியை தரும் நகரம். இங்கு, வீடு வாடகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆதலால், செலவு குறைவு. பொருட்களும் மலிவாக கிடைக்கிறது. இந்த அரண்ம
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-23 ) மண் பயனுற வேண்டும்!!! பஞ்சாபி ஹோட்டலில் இரவு உணவை முடித்துக்கொண்டு நாங்கள் செல்லவேண்டிய 'ஏர் பீ என் பீ' விடுதியான வீட்டிற்கு டிராம் பிடித்து சென்றோம். அது என்ன 'ஏர் பீ என் பீ' என்று கேட்கிடீர்களா? இது ஒருவகையான பயணிகள் தங்கும் விடுதி என்றே கூறலாம். இது போன்ற வசதிகள் இப்போது இந்தியாவில் கூட வந்து விட்டது. அதாவது, சில பணவசதி படைத்தவர்கள், தனக்கு சொந்தமான வீட்டை, சகல வசதிகளையும் செய்து கொடுத்து வாடகைக்கு விடுவதுதான் 'ஏர் பீ என் பீ'. இந்த வீடுகள், நாள் வாடகை தொடங்கி, மாத வாடகை வரை கிடைக்கும். இந்த வீட்டை கிட்ட தட்ட நம் சொந்த வீட்டை போன்றே பயன்படுத்தலாம். மளிகை சாமான்களை வாங்கி கொண்டு சமையல் செய்து சாப்பிடலாம், துணி மணிகளை துவைத்து காய போடலாம், இல்லாவிட்டால் என்னை போன்ற சோம்பேறிகள், சும்மா தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்தலாம். வாடகையில் பெரிய வித்தியாசம் இருக்காது, ஆனால், ஹோட்டலில் உள்ள கூட்டம் இருக்காது.  இங்கு ஒரு தகவல். ஏர் பீ என் பீயை ஆன்லைனில், பதிவு செய்யும்போது, அந்த வலைத்தளம் நேர்மையானது தானா? என்று தெரிந்து கொண்டு பதிவு செய்யவேண்
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-22 ) தரணியிலே பெருமை வேண்டும்!!! அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய நாடு ஆஸ்திரியா. ஆஸ்திரியா பல அதிசயங்களை, ரகசியமாக தன்னுள் வைத்திருக்கும் மிகவும் அழகிய நாடு. இதன் தலைநகரம் வியன்னா. இதுவும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. நிறைய நோபல் லாரெட்டுகளை உருவாக்கிய நாடுகளில் இதுவும் ஒன்று. 22 நோபல் பரிசுகளை பெற்று இருக்கிறது. வரலாறுகள் நிறைந்து காணப்படும் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவுக்கு போவதற்காக, காலை 11 :30 க்கு ரயிலை பிடித்தோம். வியன்னாவுக்கு நேரடியாக செல்லும் ரயில் கிடைக்காததால், ஜெர்மனியின் 'மூனிக்' (Munich ) வரை சென்று அங்கிருந்து வியன்னாவுக்கு ரயில் மாற வேண்டும். இடையில் அரை மணி நேர இடைவெளி. மொத்த பயண நேரம் எட்டு மணி. ஆனால், என்ன சோதனையோ நாங்கள் சென்ற ரயில், ஆங்காங்கே நின்று நின்று சென்றது. பிறகுதான் தெரிந்தது, ஜெர்மனியில் ரயில் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருவதாகவும், அதனால் ரயில்கள் குறித்த நேரத்தை கடை பிடிப்பது இல்லை என்ற தகவல்கள். ஒன்றரை மணிக்கு மூனிக்குக்கு வந்து சேர வேண்டிய ரயில் சரியாக அரை மணி நேரம் தாமதமாக வந்தது.
Image
 ஐரோப்பா அழைத்தது  (பாகம்-21) தனமும் இன்பமும் வேண்டும் !!! சுவிட்சர்லாந்தின் பிரபலமான பொருட்களில் ஒன்று கை கடிகாரம். கடைவீதியில் எங்கு பார்த்தாலும் கை கடிகாரக்கடைகள் பார்க்க முடிந்தது. 'ரோலெக்ஸ், போஸ், ஒமேகா, டிஸ்ஸோட்' என்று பல வகையான விலையுயர்ந்த கை  கடிகாரங்கள், அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. "சரி, வந்ததுதான் வந்தோம், உள்ளே நுழைந்து பார்த்து விடலாமென்று ஒரு கடையின் உள்ளே சென்று நோட்டம் விட்டோம்.  இங்கு ஒரு முக்கிய தகவல். கடைகள் காலை பத்து மணிக்கு மேலே தான் திறப்பார்கள், இரவு எட்டு மணிக்கு மூடிவிடுகிறார்கள். கவுண்டமணி சின்னத்தம்பி படத்தில் சொல்வதுபோல எட்டு மணிக்கு மேல்  'கோடி ருபாய்' கொடுத்தால்கூட திறக்க மாட்டார்கள். இன்னும் ஒரு ஒரு முக்கிய தகவல். சுவிட்சர்லாந்தின் தேசிய நாணயம் 'சுவிஸ் பிராங்க்', 'யூரோ' அல்ல. ஆகவே, கொஞ்சம் செலவுக்கு சுவிஸ் பிராங்க் வைத்து கொள்வது நல்லது.  நான், என் மகனுக்கு ஒரு கை கடிகாரம் வாங்கி பரிசளிக்க முடிவு செய்திருந்தேன். அதன்படி, அவருக்கு பிடித்த 'போஸ்' கை கடிகாரத்தை வாங்கி கொடுத்து மகிழ்ந்தேன். அந்த கடிகாரத்தை சுவிட்சர்
Image
  ஐரோப்பா அழைத்தது (பாகம்-20 ) பெரிய கடவுள் காக்க வேண்டும்!!! ஈஸி ஹோட்டலில் கஷ்டப்பட்டு உள்ளே சென்று எங்கள் அறையை கண்டு பிடித்து உள்ளே சென்றோம். பிறகு மற்றவையெல்லாம் சுமுகமாகவே நடந்தேறியது. அன்று ஞாயிற்று கிழமையானதால், நிறைய கடைகள் மூடியே இருந்தன. மாலை வேளை ஆனதும், ஸ்வட்டரை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பி வந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து சற்று தொலைவில் ஒரு கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. அதன் மேலிருந்த பாலத்தில் நின்று கொண்டு சுற்றி நோட்டம் விட்டபோது, நிரம்பி வழியும் அந்த கால்வாயின் கரையில் ஒரு திருவிழா கூட்டம் போல தெரியவே, அங்கு செல்லலாம் என்று முடிவெடுத்து நடைப்போட்டோம். அந்த திருவிழாக்கூட்டம் பெரும்பாலும், இளவட்டங்கள் கூட்டமாகவே இருந்தது. அது ஒரு நீச்சல் பயிற்சி செய்யும் இடமாகவும், ஸ்கேட் பலகை விளையாட்டு பயிலும் இடமாகவும் இருந்தது. மறுபக்கம் இருந்த சிறிய மைதானம் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. ஆங்காங்கே, சில ஆப்பிரிக்க இளைஞர்கள் கையில் புகை பொருளை வைத்துக்கொண்டு புகைத்து கொண்டும், நடமாடிக்கொண்டும் இருந்தார்கள். அவர்களை நெருங்கிய மற்ற சில இளைஞர்களும், இளைஞிகளும் புகை பொருளை
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-20 ) பெரிய கடவுள் காக்க வேண்டும்!!! சுவிட்சர்லாந்தும் இரு வேறு கலாச்சாரக்கலவை. ஜெனீவா நகரம் பிரெஞ்சு கலாச்சாரத்தையும், சூரிக் ஜெர்மானிய கலாச்சாரத்தையும் கொண்டுள்ளன. புழக்கத்திலுள்ள மொழியும் அப்படித்தான்.  ஜெனீவாவில் டிராம், பேருந்து மற்றும் ரயில் பயணத்தின்போது, 'அடுத்த நிறுத்தம்' என்பதை, 'ப்ரோஷனே அர்ரேட்' என்று பிரெஞ்சு மொழியிலும், 'சூரிக்'இல் 'நேஷ்ட்டே ஸ்டேஷன்' என்று ஜெர்மனிலும் ஒலிப்பார்கள். ஆக, ஒரே நாடுதான் என்று கவனமில்லாமல் இருந்தால் அதோகதி தான்.  ஜெனீவாவிலிருந்து சூரிக் மூன்று மணிநேர ரயில் பயணம். சுவிட்சர்லாந்தின் டபுள் டெக்கர் ரயிலில் காலை 9 மணிக்கு ஏறி மதிய உணவுக்கு சூரிக் சென்று விட்டோம். வழியில் லூசன், பெர்ன் போன்ற அழகிய நகரங்களும், ஆல்ப்ஸ் மலைச்சாரலும் நம்மை தொடர்ந்து வந்தன. ஆங்காங்கே குதிரை லாயங்கள், ஜெர்சி பசுக்களின் பட்டிகள், வயல் வெளிகள், ஜெனீவா ஏரியின் கரையோரம் என கண்களுக்கு குளிர்ச்சியான விருந்துதான். 12  மணிக்கு சூரிக் வந்து சேர்ந்தாகிவிட்டது. சூரிக் hbf என்பதுதான் சென்ட்ரல் ரயில் நிலையம். ஆகவே அங்கிருந்து தான்