Posts

Showing posts from February, 2009

Oscar fever - What next?

Image
First I must congratulate Music-gician A.R.Rahman for bringing India Two Oscars and Resul pookutty for adding one more. Undoubtedly both of them deserve such worldwide recognitions. It is in fact a yearning for many of the Indian film artistes on and off the screen. Finally the world had to admit the virtuosos of Indian talents. Congratulations once again. Now it is history. Our names have been inscribed on Oscar's sheets. Let me recall the hype created by the media before the colourful event and the ceremonial performances on every other streets of India. The Yagnas, Poojas, Prayers of people, Blessings and Special wishes from political leaders for the movie 'Slumdog millionaire' to win Oscar. The most disturbing thing was the special poojas performed by the Slum dwellers of Mumbai. Their prayers have been answered at last. They are all very happy right now. Their wretchednesses have been beautifully picturised and shown across the world. The excellent work of the technic

வெகுளி Vs புளுகி - A Moral

Image
வெகுளி: மாமி, நேத்திக்கி சாயங்காலம் எதோ மருந்து பேர் சொன்னேளே, என்னது அது? புளுகி: என்னடி அதுக்குள்ளே மறந்துட்டியா? வெகுளி: ஆமாம் மாமி, எனக்கு ரொம்ப மறதி ஜாஸ்தி. இப்படித்தான் நேத்திக்கிபுளி வாங்கலாம்னு கடை வரைக்கும் போயிட்டு புளியை மட்டும் மறந்துட்டேன். கடைக்காரன் என்ன வேணும்னு கேக்கறான், திரு, திருன்னு முழிக்கறேன்பாத்துக்கோங்கோ. புளுகி: அய்யய்யோ, அப்புறம் என்ன ஆச்சு? வெகுளி: கடைசி வரையிலும் புளி ஞாபகம் வரவேயில்ல, தக்காளிய வாங்கிண்டுதிரும்பி வந்தேன். நல்ல வேளையா தக்காளி ஒரே புளிப்பு. அத போட்டு ரசம்பண்ணி சமாளிச்சுட்டேன். புளுகி: அடிப்பாவி. மறதி ஜாஸ்தின்னா எழுதி எடுத்துண்டு போக வேண்டியதுதானே. உன் ஆத்துகார்தான் ரொம்ப பாவம். நீ எத பண்ணினாலும் வாய் பேசாமசாப்பிட்டுட்டு போயிடறார். வெகுளி: அந்த கண்றாவிய ஏன் கேக்கறேள்.ஒரு நாள் அவருக்கு மத்தியானம் லஞ்சுக்கு கேரியரோட மூணு டப்பாலேயும் குழம்பு, ரசம், மோர் மட்டும் வச்சுட்டுசாதமே வைக்காம அனுப்பிட்டேன். பாவம் மனுஷன் மூணையும் 'கட, கட'ன்னுகுடிச்சுட்டு சாயங்காலம் சோர்ந்து போய் வந்தார், பாவம். புளுகி: உன் ஆத்துக்காரராக்கும் வாய் மூடிண்டு சகிச்சுண்

Slum dog millionaire - A Proud moment?

Image
மும்பையின் சேரிப்பகுதியில் வளர்ந்த ஜமால் மில்லியனேர் போட்டியில் கலந்து கொண்டுவெற்றி பெற்றது எப்படி? அ. அவன் அறிவாளி ஆ. அவன் புத்திசாலி இ. அவன் ஏமாற்றினான் ஈ. எழுதி வைக்கப்பட்ட விதி. இது தான் படத்தின் கதை. இந்து முஸ்லீம் கலவரத்தில் தாயை இழந்து ஒதுங்கும் இரண்டு குழந்தைகள். இந்த அண்ணன், தம்பிகளோடு மூன்றாவதாக வந்து சேரும் பெண் குழந்தை. மும்பையின் சேரியில் வளரும் இந்த குழந்தைகள் சமுதாயத்தின்தாக்குதல்களில் சிக்கி உதை பட்டு, மிதி பட்டு காயங்களோடு சிரித்துவிளையாடுவது நம் கண்களில் நீரை வரவழைக்கிறது. இவர்களைப்போலநூற்றுக்கணக்கான குழந்தைகள் வலம் வருவதை பார்க்கும்போது நம்மனதுக்குள் பயம் பற்றிக்கொள்கிறது. குழந்தைகளை ஆசை காட்டி அழைத்துச்சென்று அவர்கள்கண்களைப்பிடுங்கி பிச்சைக்கு அனுப்புவது போன்ற சமாச்சாரங்கள் நாம்குழந்தையாக இருந்த போது பெற்றோர்கள் நம்மை மிரட்டுவதற்கு பயன் படுத்தியகதை, இந்தப்படத்தில் நிஜமாக காண்பிக்கிறார்கள். மூன்றாவதாக வந்த பெண்குழந்தை இவர்களிடமிருந்து பிரிந்து போனவுடன் என்ன நிகழும் என்பதை முன்கூடியே ஊகிக்க முடிகிறது. பிச்சையில் ஆரம்பித்து சிறு சிறு திருட்டுகள் நிகழ்த