Slum dog millionaire - A Proud moment?

மும்பையின் சேரிப்பகுதியில்வளர்ந்த
ஜமால் மில்லியனேர் போட்டியில் கலந்து கொண்டுவெற்றி பெற்றது எப்படி?
அ. அவன் அறிவாளி
ஆ. அவன் புத்திசாலி
இ. அவன் ஏமாற்றினான்
ஈ. எழுதி வைக்கப்பட்ட விதி.

இது தான் படத்தின் கதை. இந்து முஸ்லீம் கலவரத்தில் தாயை இழந்து ஒதுங்கும் இரண்டு குழந்தைகள். இந்த அண்ணன், தம்பிகளோடு மூன்றாவதாக வந்து சேரும் பெண் குழந்தை. மும்பையின் சேரியில் வளரும் இந்த குழந்தைகள் சமுதாயத்தின்தாக்குதல்களில் சிக்கி உதை பட்டு, மிதி பட்டு காயங்களோடு சிரித்துவிளையாடுவது நம் கண்களில் நீரை வரவழைக்கிறது. இவர்களைப்போலநூற்றுக்கணக்கான குழந்தைகள் வலம் வருவதை பார்க்கும்போது நம்மனதுக்குள் பயம் பற்றிக்கொள்கிறது. குழந்தைகளை ஆசை காட்டி அழைத்துச்சென்று அவர்கள்கண்களைப்பிடுங்கி பிச்சைக்கு அனுப்புவது போன்ற சமாச்சாரங்கள் நாம்குழந்தையாக இருந்த போது பெற்றோர்கள் நம்மை மிரட்டுவதற்கு பயன் படுத்தியகதை, இந்தப்படத்தில் நிஜமாக காண்பிக்கிறார்கள். மூன்றாவதாக வந்த பெண்குழந்தை இவர்களிடமிருந்து பிரிந்து போனவுடன் என்ன நிகழும் என்பதை முன்கூடியே ஊகிக்க முடிகிறது. பிச்சையில் ஆரம்பித்து சிறு சிறு திருட்டுகள் நிகழ்த்திபொய் சொல்ல கற்றுக்கொண்டு துப்பாக்கியை கையில் ஏந்தி சமுதாயத்தில்வளர்ச்சி பெற்ற அண்ணன். பொய்யை மட்டுமே கற்றுக்கொண்டு தாஜ் மகாலை வெளி நாட்டினருக்கு சுற்றிக்காட்டி தொழில் செய்யும் தம்பி, குழந்தைப்பிராயத்திலேயே விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு தம்பியின் காதலியாகவிளங்கி, தம்பியை அண்ணனிடமிருந்து காப்பாற்ற அண்ணனுக்கு தன்னைஅளிக்கும் காதலி என்று சமுதாயத்தின் ரணங்களை மேலும் கீரிப்பார்த்திருக்கிறார்கள். இவை அனைத்தும் மிகத்திறமையாக படமாக்கப்பட்டிருக்கிறது. லாஜிக்கையெல்லாம் மறந்து விட்டுப்பார்த்தால் ஜமால் மில்லியனேர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ஏற்றுக்கொள்ளலாம். அதற்காக நிகழ்ச்சியை நடத்தும் அணில் கபூர் ஜமாலை தோற்கடிக்க செய்யும் சதிகள், போலீசை கொண்டு ஜமாலை அடித்து உதைத்து உண்மை சொல்ல சொல்லுவது எல்லாம் ஒரே காமடி. வாழ்க்கை அனுபவங்களே கேள்விகளாக வர பரிசை எளிதாக வெல்கிறார் ஜமால். சிரிக்க கூடாது, சீரியசாகத்தான் சொல்கிறேன்.
எ. ஆர். ரகுமான் இசைக்காக கோல்டன் குளோப் அவார்ட் கிடைத்திருக்கிறது. எ. ஆர். ரகுமானின் மற்ற இசைகளை கேட்டவர்களுக்கு இந்த திரைப்படம் ஒன்றும் பெரிய ஆச்சரியத்தை தந்ததாக தெரியவில்லை. மும்பையின் மூலை முடுக்குகளில் எல்லாம் நுழைந்து அவலங்களை படம் பிடித்திருக்கிறார்கள். அவார்ட் படம் என்றால் இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் போலிருக்கிறது.


Nothing to feel proud about it
.


Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar