வெகுளி Vs புளுகி - A Moral



வெகுளி: மாமி, நேத்திக்கி சாயங்காலம் எதோ மருந்து பேர் சொன்னேளே, என்னது அது?

புளுகி: என்னடி அதுக்குள்ளே மறந்துட்டியா?

வெகுளி: ஆமாம் மாமி, எனக்கு ரொம்ப மறதி ஜாஸ்தி. இப்படித்தான் நேத்திக்கிபுளி வாங்கலாம்னு கடை வரைக்கும் போயிட்டு புளியை மட்டும் மறந்துட்டேன். கடைக்காரன் என்ன வேணும்னு கேக்கறான், திரு, திருன்னு முழிக்கறேன்பாத்துக்கோங்கோ.

புளுகி: அய்யய்யோ, அப்புறம் என்ன ஆச்சு?

வெகுளி: கடைசி வரையிலும் புளி ஞாபகம் வரவேயில்ல, தக்காளிய வாங்கிண்டுதிரும்பி வந்தேன். நல்ல வேளையா தக்காளி ஒரே புளிப்பு. அத போட்டு ரசம்பண்ணி சமாளிச்சுட்டேன்.

புளுகி: அடிப்பாவி. மறதி ஜாஸ்தின்னா எழுதி எடுத்துண்டு போக வேண்டியதுதானே. உன் ஆத்துகார்தான் ரொம்ப பாவம். நீ எத பண்ணினாலும் வாய் பேசாமசாப்பிட்டுட்டு போயிடறார்.

வெகுளி: அந்த கண்றாவிய ஏன் கேக்கறேள்.ஒரு நாள் அவருக்கு மத்தியானம்லஞ்சுக்கு கேரியரோட மூணு டப்பாலேயும் குழம்பு, ரசம், மோர் மட்டும் வச்சுட்டுசாதமே வைக்காம அனுப்பிட்டேன். பாவம் மனுஷன் மூணையும் 'கட, கட'ன்னுகுடிச்சுட்டு சாயங்காலம் சோர்ந்து போய் வந்தார், பாவம்.

புளுகி: உன் ஆத்துக்காரராக்கும் வாய் மூடிண்டு சகிச்சுண்டு இருக்கார். இதேஎங்காத்துக்காரரா இருந்தேர், அவ்வளவுதான். நான் நேரா குணசீலமோ, கீழ்ப்பாக்கமோ போக வேண்டியதுதான். பகவான் பார்த்து தான் ஜோடிசேர்க்கிறார்.

வெகுளி: பார்த்தேளா, பேச்சு வாக்குல கேக்க வந்தத மறந்துட்டேன். அந்த மருந்துபேரு என்னன்னு நீங்க இன்னும் சொல்லலியே.

புளுகி: அதுவா, திரிபலா சூரணம். நாட்டு மருந்து கடைல கிடைக்கும்.

வெகுளி: ரொம்ப தேங்க்ஸ், மாமி. அய்யய்யோ, பால அடுப்புல வச்சேன், மறந்தேபோயிட்டேன்.

புளுகி: ஏண்டி பொண்ணே, போன வாரம் ஐம்பது ரூபாய் அவசரமா வாங்கிண்டுபோனியே, திருப்பியே தரலியே.

வெகுளி: ஐம்பது ரூபாயா? எப்போ மாமி?

புளுகி: அதுக்குள்ளே மறந்துட்டியா? அதாண்டி, மாம்பழம் வாங்கும்போது, சில்லறை இல்லேன்னு உனக்கும் சேர்த்து நான் கொடுத்தேனே.

வெகுளி: இல்லையே மாமி, ரெண்டு பேருக்கும் சேர்த்து நான்தானே கொடுத்தேன்.

புளுகி: சீ, சீ... நான்தான் கொடுத்தேன். நீ என்ன பண்ணுவ பாவம். உனக்கு தான்மறதி ஜாஸ்தி ஆச்சே! பரவா இல்ல, உன் ஆத்துக்கார் வந்ததும் ஞாபகமா வாங்கிகொடுத்துடு. சரியா...

வெகுளி: (தலையை சொரிந்து கொண்டே செல்கிறாள்) சரி.... மாமி....


Moral: Do not reveal your weaknesses to everyone. Try to correct yourself.

Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar