சச்சின் - ஒரு சகாப்தம்
பலமான தென் ஆப்பிரிக்காவுற்கு எதிராக குவாலியரில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் ஒரு சரித்திரம் படைத்திருக்கிறார் சச்சின். ஒரு நாள் கிரிக்கட் வரலாற்றில் முதன் முறையாக இருநூறு ரன் என்ற சிகரத்தில் தடம் பதித்திருக்கிறார். வெறும் 147 பந்துகளில் அந்த சாதனையை செய்திருக்கிறார். இந்த போட்டியை பார்த்த அனைவரும் மீண்டும் இப்படி ஒரு ஆட்டத்தை காண பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வரின் முந்தைய சாதனையான 194 ரன்னை முறியடித்த சச்சினை அதே பதினைந்து வயது துள்ளலோடு இன்றும் பார்க்க முடிவதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம். கிரிக்கெட்டின் மீது அவர் கொண்டுள்ள அளவில்லாத பற்று அவரை மேலும் பல சாதனைகளை செய்ய தூண்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
வாழ்க சச்சின்.
Comments
Post a Comment