A Short family trip to Europe-3
ஐரோப்பா அழைத்தது. (பாகம் -2 )
மனதில் உறுதி வேண்டும்!!!
என் மகனுடைய பட்டமளிப்பு விழா, தேதி குறிப்பிடப்படாமல், ஏப்ரல் மாதத்தில் இருக்கலாம் என்று தகவல் கிடைத்ததை கொண்டு, விசா ஏற்பாடுகளை துவங்க முடிவு செய்தேன். அதன்படி, பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் உள்ள விசா அலுவலகங்களை கூகிள் ஆசானின் உதவியோடு தேடிப்பார்த்ததில் முதலில் ஏமாற்றம் தான். காரணம், நெதர்லாந்துக்கு விசா கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்து காணப்பட்டதுதான். இங்கு ஒரு செய்தி: என் மகன், நெதர்லாந்திலுள்ள Technological University of Delft (TU Delft ) ல் முதுகலை பட்டம் முடித்துவிட்டு பட்டம் பெறுவதற்காக தயாராகி கொண்டிருந்தார்.
இப்போது புரிந்திருக்கும், நான் ஏன் நெதர்லாந்துக்கு விசா தேடிக்கொண்டிருந்தேன் என்று. அந்நாட்டுக்கான விசா கிடைப்பது கடினமானதுதான், ஆனால் அது ஒன்றும் பெரிய கவலைக்குரிய விஷயமில்லை. ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் எந்த நாட்டுக்கு (Schengen countries ) விசா கிடைத்தாலும், மற்ற நாடுகளுக்கு (27 நாடுகள்) எளிதாக செல்லலாம் என்பது முக்கியமான தகவல்.
எனவே ஜெர்மனிக்கு விசா விண்ணப்பத்தை கொடுக்க முடிவு செய்தேன்.
எப்படி online மூலமாக விசா விண்ணப்பம் தருவது என்ற கேள்விக்கு கூகிள் ஆசான் கொடுத்த பதில், VFS குளோபல். VFS குளோபல் நிறுவனம், ஏனைய நாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கான விசா சேவைகளை வழங்கும் உலகளாவிய நிறுவனம். இந்த சேவை மையங்கள், சென்னை உட்பட பல நகரங்களில் இயங்குகிறது. Online ல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சேவைக்கான தொகையை செலுத்தி விசாவுக்கான நேர்காணல் தேதியை குறித்து வைத்து கொண்டேன். என்ன தேதி தெரியுமா, ஜூன் 5 சிரிப்பு வருகிறதா? எனக்கு கோபம் தான் வந்தது. ஏப்ரல் மாத விழாவுக்கு, ஜுனில் விசா நேர்காணல்.
என்ன செய்தேன்? (தொடரும்)
Comments
Post a Comment