உன்னிலே என்னைக்கண்டேன்
தாயே உனைக்கண்ட போதுதான் நான் குழந்தையென உணர்ந்தேன்,
கதிரே உனைக்கண்ட போதுதான் கண்களை நான் உணர்ந்தேன்,
பறவையே உனைக்கண்ட போதுதான் எண்ணங்களை நான் உணர்ந்தேன்,
நண்பனே உனைக்கண்ட போதுதான் தோள்களை நான் உணர்ந்தேன்,
பெண்ணே உனைக்கண்ட போதுதான் நான் ஆண் என்பதை உணர்ந்தேன்,
மகனே உனைக்கண்ட போதுதான் பாசமென்பதை உணர்ந்தேன்,
தோழியே உனைக்கண்ட போதுதான் உள்ளமென்பதை உணர்ந்தேன்,
உடலே உனைக்கண்ட போதுதான் நான் உயிர் என்பதை உணர்ந்தேன்.
kavikku en vanakkangal...
ReplyDeletekavithaikku en parattukkal...
ippanikku melumthodara en vazthukkal...