கதிரவன் எனும் கள்வன்
கோடி மைல்களுக்கு அப்பால் சென்று
ஓடி ஒளிந்தாயே கதிரவனே,
என் தாயைப்பார்,
தன் மடியிலே எனைப்புதைத்து,
நீரூட்டி, சோறூட்டி நான் வாழும்வரை எனைத்தாங்கி,
நான் வீழும்போது எனை அணைத்துக்கதறி அழுது,
கண்ணீரில் கடல்தனை உருவாக்கினாள்.
கள்வனே உணர்ந்துகொள்,
உன் பிம்பமொன்றே போதும் என் தாய்க்கு
எங்களுக்கு உயிர் கொடுப்பாள்.
Comments
Post a Comment