பூங்கா


பூங்கா என்றாலே குழந்தையாகஇருந்தாலும் சரி, பெரிசுகளாகஇருந்தாலும் சரி, கொண்டாட்டமும்குதூகலகமும்தான். விடுமுறைநாட்களின், மாலைவேளைகளில் அனேகமாகஎல்லா பூங்காக்களுமே நிரம்பிவழிகின்றன. அன்றாடவேலைகளிலிருந்து விடுதலைபெற்றுக்கொண்டு இரண்டு, மூன்று மணி நேரங்களைபூங்காவில்செலவழித்தால்தான் ஒரு புத்துணர்வு நமது உடம்பிற்குள் ஊடுருவுகிறது. இல்லை என்றால் "உம்முனாமூஞ்சி"யைப்போல் உலா வரவேண்டியிருக்கிறது. மற்றபடி "பிராண வாயு நிறைய கிடைக்கிறது, நூறு வருடம் வாழலாம்" என்பதுஎல்லாம் சுத்த டபாய்த்தல். இந்த புகை மண்டலத்தில் (அட, வாயுமண்டலம்தானுங்க) பிராண வாயுவை தேடியே பிராணன் போய் விடுகிறது. அப்புறம் எங்கே நூறு வருடம்? நமக்கு அந்த ஆசையெல்லாம் இல்லீங்க, 'இருக்கிற மூஞ்சியை ஏன் உம்முனாமூஞ்சியாய் ஆக்கணும்?' அப்படீங்கிறநோக்கத்துலதான் இப்போதும் பூங்காவிற்கு வந்து கொண்டிருக்கிறேன். வழக்கம்போலவே இன்றைக்கும் பூங்காவில் கூட்டத்துக்கு பஞ்சமில்லை. அங்கும், இங்குமாக சிறுசுகளும், பெரிசுகளும், சிறிய-பெரிசுகளும், பெரிய-சிறிசுகளும் ஓடி, ஆடி விளையாடுவதை பார்க்கும் போது மனசுக்கு இதமாகஇருக்கிறது. பசுமையான புல்வெளியில் காலை நீட்டி அமருவதற்காக இடத்தைதேடினேன். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த பகுதியின் மேற்குபக்கத்தில் அழகான செயற்கை நீரூற்றுக்கு பின் புறம் அதிக நடமாட்டம் இல்லாததால் அந்த பகுதியை நோக்கி சென்றேன். வெளிச்சம் சற்றுகுறைவாகவே இருந்தாலும், புல் அதிகம் செதுக்கப்படாமல் இருந்தது எனக்குநிம்மதியை தந்தது. அது என்னவோ புல் செதுக்குபவர்களுக்கு இந்தியன் மிலிடரிசர்வீசில் முடி திருத்தும் பணியில் இருப்பது போலவே தோன்றுகிறது போலும், ஓட்ட வெட்டி விடுகிறார்கள். உட்காரும் போது, மாரியம்மன் கோவிலின்வாசலில் முள் படுக்கையில் படுத்திருப்பார்களே, அது போலத்தான் தோன்றும். நல்ல வேளையாக இந்தமுறை அப்படியில்லை. ஒரு வழியாக மெத்து, மெத்தெனஇருந்த இடத்தை கண்டு பிடித்து அமர்ந்தேன். எனக்கு பின் புறம் ஒருவர்பூங்காவின் வெளிப்புறத்தை பார்த்தவாறு அமர்ந்து இருந்தார். நான் காலைநீட்டியபடி குழந்தைகளின் பரவசத்தை ரசித்துக்கொண்டு இருந்தேன். சிறிது நேரஅமைதிக்கு பின் பின்னாலிருந்து லேசான விசும்பல் கேட்டதால் மெதுவாக திரும்பினேன். அந்த நபர் தலையை குனிந்து அழுது கொண்டிருந்தார். நான்மெல்ல அவர் பக்கம் நகர்ந்து, அவர் தோளில் லேசாக கையை வைத்து, "என்ன, நண்பா, என்னாச்சு உங்களுக்கு?" என்றேன். அவர் லேசான பதற்றத்துடன்கண்களை துடைத்துக்கொண்டு "ஒண்ணும் இல்ல சார், நத்திங்" என்று சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டார். அவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்தான், பலமுறை பார்த்திருக்கிறேன், ஆனால் பேசியதில்லை. இன்று அதற்கான நேரம்வந்து விட்டதாகவே உணர்ந்தேன். "சார், உங்கள நான் பல முறைபார்த்திருக்கிறேன், தெர்மல்ல தானே வேலை செய்யுறீங்க?" என்று பேச்சை ஆரம்பித்தேன். அவருக்கு அறிமுகத்தில் விருப்பமில்லைஎன்பதை, அவர் தலை அசைவில் தெரிந்து கொண்டேன். "ஆமாம்" என்ற வார்த்தையை "இல்லை" என்ற சைகையில்தெரிவித்தார். சற்று
அமைதிக்குப்பின் "தெர்மல்லஷிபிட்டு ட்யூட்டியும் சரி, ஆபீஸ் ட்யூட்டியும் சரி ரொம்ப டைட்டுதான்" என்றேன். லேசாக தலை அசைத்து ஆமோதித்தார். "ஆமா சார், ஆம்பளைங்கஅழக்கூடாதுன்னு நெறைய பேர் சொல்லுவாங்க" என்று சொல்லிக்கொண்டேஅவர் முகத்தை லேசாக கவனித்தேன். தலையை தூக்கி முறைப்பது போலேபார்த்தார். அதை கவனிக்காதவன் போல் மேலே பேச்சை தொடர்ந்தேன். "அழுகைல என்னங்க ஆம்பளை, பொம்பளை? அழுகைங்கறது ஒரு உணர்வு, 'பொம்பளைங்க சிரிக்க கூடாது, ஆம்பளைங்க அழக்கூடாது', அப்படீங்கறதுஎல்லாம் சுத்த ஹம்பக். யாரோ பெனாத்தியது." இப்போது அவர் முகத்தில் சின்னமாற்றம், "ஹும்" என்று தோளைஅசைத்தார்.
"உணர்வுகளை எப்பவும் அடக்கி வைக்க கூடாதுங்க, உடனேவெளிப்படுத்திடனும். நான் 'டக்' குன்னு அழுதுடுவேன். குழந்தை மாதிரி." என்றவுடன் என்னை ஏற, இறங்க பார்த்தார்.
"ஆனா ஒரு விஷயங்க, அழுதுட்டு அப்புறமா யோசிச்சு பாத்தா நம்ம அழுகைக்குபல நேரங்கள்ல அர்த்தமே இருக்கறதில்லங்க. வாழ்கையில எவ்வளவோகஷ்டம் வரும், கூடவே அழுகையும் வரும். கொஞ்ச நாளைக்கப்புறம் யோசிச்சுபார்த்தா சிரிப்புதான் வருது." என்றவுடன் என்னை இடை மறித்து பேசஆரம்பித்தார்.
"அது உங்களுக்கு வேணும்னா கரெக்ட், ஆனா கஷ்டம்னு வந்தா என்னிக்கும்கஷ்டம்தான், அழுதுதான் ஆவணும்."
"யு ஆர் ரைட், அது வர்ற கஷ்டத்தை பொறுத்தது. சில விஷயங்கள் மனசை விட்டுவிலகறதே இல்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க அழுததுக்கு கூட ஏதோசீரியசான காரணம் இருக்கும், இல்லையா?" என்றவாறு என் கேள்வியைஎழுப்பினேன். தலையை மேலும் கீழும் அசைத்தவாறு "ப்ச்" என்றவர் பேசஆரம்பித்தார்.
"என்னோட கூடவே வேலைக்கு சேர்ந்து, என் பக்கத்து சீட்டிலேயே உட்கார்ந்துவேலை பார்த்தவன் சார், என்னோட க்ளோஸ் ப்ரெண்ட். மத்தியானம் லன்ச்சாப்பிட போனவன், திரும்பி வரல, 'ஹார்ட் அட்டாக்'. என்ன வயசு தெரியுமா? நாற்பத்தி ஒன்று." என்றவர் குரல் தழு, தழுக்க ஆரம்பித்தது.
"அயம் சாரி," என்று கூறி சிறிது மவுனம் சாதித்தேன். பிறகு மெல்ல பேச்சை திசைதிருப்ப முயன்றேன்.
"இப்பல்லாம் வர்ற டிசீஸ் எல்லாத்துக்கும் நம்ம வாழ்க்கை முறைதான் சார்காரணம். சரியான உணவு முறை இல்ல, உடம்புக்கு சரியான வேலைகொடுக்கறது இல்லை......" மீண்டும் இடை மறித்தார் நண்பர்.
"என்ன சார், வாழ்க்கை முறை? இந்த வயசு சாக வேண்டிய வயசா சார். அப்படிஎன்ன சார் சாப்பிட்டுட்டான்? ரெண்டு குழந்தைங்க சார், பன்னண்டு வயசு, ஏழுவயசு. என்ன சார் செய்வாங்க?" கேள்விகளை அடுக்கி கொண்டே போனார். மீண்டும் மவுனம்.
"கஷ்டம்தான் சார், ரொம்ப கஷ்டம்." எனக்கு அவரைப்பார்க்க ரொம்பபெருமையாக இருந்தது. மற்றவர் துன்பத்தை நினைத்து அழுபவர் கடவுளுக்குசமம். என் கைகளை அவர் தோளில் அழுத்தி,
"ஆனா சார், எல்லா கஷ்டங்களையும், போராட்டங்களையும் தாண்டி வரதுதான்வாழ்க்கை."
"ம்ஹும்! அந்த குழந்தைகளுக்கு வாழ்க்கைனா என்னான்னு தெரியுமா?" என்னமோ பேச வந்துட்டீங்க என்பது போல் என்னை பார்த்தார்.
"தெரியாது சார், அதனால்தான் அவங்க ரொம்ப நேரம் அழறது இல்லை" என்றுகூறி சிறிது இடைவெளி விட்டேன்.
"இந்த வாழ்க்கைங்கறது குழந்தைங்க விளையாடுற இந்த பூங்கா மாதிரிதான். இதுல எல்லா குழந்தையும் விளையாடலாம். சறுக்கு மரம், ஊஞ்சல், சி-சா, ராட்டினம், ஏன் மண்ணை குமித்து வீடு கட்டலாம், இந்த புல்மேல உருளலாம், என்ன வேணும்னாலும் செய்யலாம். ஒரு குழந்தை சறுக்கும், இன்னொன்றுஊஞ்சல் ஆடும், ஓடும், விழும், அழும். கடைசியில் இந்த பூங்காவை விட்டுவீட்டுக்கு செல்லும். ஒரு குழந்தை போவதை பார்த்து மற்றொரு குழந்தைகொஞ்சம் வாடும். அவ்வளவுதான். கூடவே செல்வதும் இல்லை, அழுதுகொண்டே இருப்பதும் இல்லை. இது விளையாட தொடங்கும்."என்று பிரசங்கம்செய்தேன்.
"இதெல்லாம் விளையாட்டில் சரிதான். அந்த குழந்தைகளோட நிலைமையைகொஞ்சம் நினைச்சு பாருங்க. இனிமேல் அவர்களை யார் கவனிப்பார்கள்? அன்றாட தேவைகளுக்கு யார் உதவுவார்கள்? எல்லாத்துக்கும் மேலபொருளாதாரத்துக்கு என்ன செய்வார்கள்?" அவர் வினாக்களில் நியாயம்இருப்பது தெரிந்தது.
"நீங்க சொல்றது எல்லாம் நியாயம்தான் சார். ஆனால், நடைமுறை எல்லாநேரத்திலும் நம் எதிர் பார்ப்பு போலே அமைவது இல்லையே"
"எது சார் எதிர் பார்ப்பு? ஒரு மனிதன் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்என்பது எதிர் பார்ப்பா?" அவர் பேச்சில் வேகம் தெரிந்தது. அவர் மிகவும்நல்லவராக இருக்க வேண்டும்.
"படைப்புகளில் ஒவ்வொரு படைப்புக்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு என்பதைநீங்கள் நம்புறீங்களா?"
"ஆமாம்" என்று தலை அசைத்தார்.
"ஆனால் எல்லா காரணங்களும் நமக்கு தெரிவதில்லை சார், நமக்கு தெரிந்ததுஎல்லாம் உறவுகள் மட்டும்தான். அதை மட்டுமே வைத்து கொண்டு நாம்ஏற்படுத்திக்கொண்ட கனவுகள்தான் இப்போது எதிர்பார்ப்புகளாக மாறிவிடுகிறது."
"அப்படீன்னா, நம்ம குடும்பத்தை பேணி காக்கவேண்டியது நம்ம கடமைஇல்லையா?"
"நிச்சயமாக அது நம்ம கடமைதான், குடும்பம் மட்டும் இல்லை, இந்த ஊர், இந்தமரம், இந்த பூங்கா எப்படி எல்லாமே நம்ம கடமைகள்தான். ஆனால், கடமைகளைமட்டும் வைத்துக்கொண்டு அவைகளை நாம் சொந்தம் கொண்டாட கூடாது. அதுஅவைகளின் சுதந்திரத்தை பறிப்பது போல. குழந்தைகளைப்போல நேரம் முடிந்தவுடன் பொருள்களை விட்டு விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும். நீங்கள்போராட்டத்தில் தோற்றுபோனவர்களை மட்டும் பார்த்தால் உங்களுக்குபரிதாமும் அழுகையும்தான் வரும். வெற்றி பெற்றவர்களை பார்த்து பழகுங்கள். அதுதான் உங்களுக்கு தெளிவைத்தரும்." என்றேன்.
கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் கீழே குனிது கொண்டிருந்தவர் மெல்ல மெல்லதலையை தூக்கி,
"சார் நீங்க தெனமும் இங்க வர்றீங்களா"என்றார்.
"ஏன் சார், நீங்க வர்றத நிறுத்திர போறீங்களா?" என்றவுடன் 'குபீர்' என்றுசிரித்தவர்
"தேங்க்யூ, நாளைக்கு பார்க்கலாம்" என்று கூறி விட்டு தலையைகோதிக்கொண்டே சென்றார்.



Comments

Popular posts from this blog

Dharbhai - An article by TRS Iyengar

Namasivaya and Sivayanama - What I read, Want to Share

A stone in my shoe