நான் கடவுள் - பதில் இல்லாத வினாத்தொகுப்பு


உபநிஷதுகளில் வரும் மகா வாக்கியம் "அஹம் ப்ரம்ஹாஸ்மி", அதாவது 'நான் கடவுள்'. ஒரு மனிதனின் உச்சநிலையாக சொல்லப்படுவதே இந்தஅஹம் ப்ரம்ஹாஸ்மி. இந்த கருவைமனதில் கொண்டு இந்தப்படத்தின் மூலமாக பல கேள்விகளை எழுப்பி உள்ள பாலாவின் நேர்மையான தைரியத்திற்கு பாராட்டு சொல்லியேஆகவேண்டும்.
'ருத்ரன்', பதினாலு வருஷங்களுக்குமுன்னால் ஜோசியக்காரரின் சொல்லுக்கிணங்க தாய், தந்தையரால்கை விடப்பட்டு காசியில் அஹோரிகளுக்கு' நடுவே வளரும் இளைஞன். ஆமாம்! அதென்ன அஹோரி? என்று நீங்கள் குழம்புவதுபுரிகிறது. அஹோரிகள் காசியில் உலவும், 'அஹம் ப்ரம்ஹாஸ்மி'யை உணர்ந்து வாழும் அசாதாரண துணிச்சல்மிக்க சாமியார்கள் என்றும், உயிர்களை மறு பிறவியிலிருந்து விடுவிக்ககூடியவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. ருத்ரனும் ஒரு அஹோரியாக வளர்ந்துவிட, திடீரென்று ருத்ரனின் தாய், தந்தையருக்கு தங்கள் மகனுடைய நினைப்புவந்துவிடுவதால், ருத்ரனின் தந்தை மகனைத்தேடி காசியின் வீதிகளில், மயானங்களில் என்று மூலை மூலையாக திரிகிறார். நேரில் காசியைகாணாதவர்கள் இந்தப்படத்தின் மூலம் காசியை காண ஒரு வாய்ப்பு (மூக்கைபிடித்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல்). கஞ்சா ஏந்திய கையேடுமகனை பார்க்கும் போது குமுறுகிறார். மகனை உடன் அழைத்து செல்லமுனைகிறார். ருத்ரனின் குரு நாதர் மீண்டும் 'அஹம் ப்ரம்ஹாஸ்மி' மந்திரத்தைருத்ரனுக்கு உபதேசித்து அனுப்புகிறார்.
பிறந்த கிராமத்துக்கு வந்த ருத்ரன் தாய், தந்தையிடம் எந்த வித உணர்வும்காட்டாமல் பிச்சை காரர்களோடும், ஆண்டிகளோடும் ஒண்டிக்கொண்டுமலைக்கோவிலின் உச்சியில் தங்கி விடுகிறார். ருத்ரனாக வரும் ஆர்யாருத்ரனாகவே மாறியிருக்கிறார்.
இதற்கு பின்தான் பாலா கேள்விகணைகளை அடுக்கடுக்காக தொடுத்துஇருக்கிறார். பிச்சை காரர்களை கொண்டு தொழில் செய்யும் மாபியா கும்பல், அதற்கு ஒரு தலைவன், பல தரகர்கள், மொத்தத்தில் 'பிள்ளை பிடிக்கிற கூட்டம்' கண்ணில் அகப்படும் அங்க ஹீனம் படைத்த, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட, மனநலம் குன்றிய இறைவனின் மனித படைப்புகளை எல்லாம் அள்ளி வந்துஅவர்களை மேலும் வதைத்து பிச்சை எடுக்க வைத்து அந்த பொருளில் உடல்வளர்க்கும் கயவர்கள். அடுத்த முறை யாரேனும் பிச்சை கேட்டு வந்தால் சட்டைபாக்கெட்டில் கை நுழைவதற்கு முன்னால் நிச்சயம் யோசிக்க வைக்கும். இந்தபிச்சை காரர்களை கொண்டு நம் அனைவரையும் சிந்திக்க வைத்து இருக்கிறார். "சாமி, பாவப்பட்ட சென்மம் சாமி, ஒரு நல்ல வாக்கு சொல்லுங்க" என்று மௌனசாமியாரிடம் ஒரு பிச்சை காரர் கேட்க, மற்றொரு பிச்சைக்காரர் "சாமி நம்ம கிட்டபேசலேன்னா என்ன? நாமதான் தெனம் சாமி கிட்ட பேசிக்கிட்டு இருக்கோம்ல, அதுவே பெரிய புண்ணியம்" என்று சொல்லும்போது யதார்த்தம் தெரிகிறது. 'அம்சவல்லி' பார்வை அற்ற இனிய குரல் படைத்த பிச்சைக்காரி. கயவர்களால்விலை பேசப்பட்டு இடம் பெயர்ந்து வந்து மீண்டும் பிச்சை எடுக்கிறார். பிச்சைக்காரர்களுக்கு நடுவே உருவாகும் நையாண்டி, நக்கல், கோபம், காதல்என்று எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சில வசனங்கள்ஆத்திகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. ஆனால் விரக்தியின் உச்சத்தில் உள்ளமனிதனின் சொற்கள் அப்படித்தான் இருக்கும். பிச்சைக்காரர்கள் ஒருமாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு பலவந்தமாக ஏற்றுமதிசெய்யப்படுகிறார்கள் என்பதை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவ்வாறு செய்யப்படும்போது அவர்களுக்குள் ஏற்படும் பிரிவு உபசாரம் நம்கண்களில் நீரை வரவழைக்கிறது. குருட்டு 'அம்சவல்லி'யை ஒரு விகார உருவம்கொண்ட ஒருவருக்கு விற்பனை செய்யும் முயற்சி தோற்றுபோனதால் மாபியாதலைவன் கோபம் கொண்டு அம்சவல்லியை அருவருப்புவல்லியாக சிதைத்துவிடுகிறான். இனி பூமியில் வாழ்வதே முடியாது என்று அம்சவல்லி முடிவு செய்துஅஹோரியான ருத்ரனிடம் சரணம் அடைந்து தன்னை அழித்து விட்டு, மீண்டும்பிறவாத வரம் அருள வேண்டும் என்று வேண்டி கொள்கிறாள். ருத்ரன்அம்சவல்லிக்கு அருளுவதோடு மாபியா கும்பலையும் ஒழித்து கட்டி விட்டுமீண்டும் காசிக்கே போய் விடுகிறார்.
படத்துக்கு இசை இசைஞானி இளையராஜா. "பிச்சை பாத்திரம்" பாடல் நம்மனதை பிசைந்து விடுகிறது. வசனங்கள் சிம்ப்லி சூபர்ப், ஆழ்ந்து கவனிக்கவைக்கிறது. காசியிலாகட்டும், பிச்சைக்காரர்கள் மத்தியில் ஆகட்டும், ஒளிப்பதிவு பிரமாதம்.
ஆமாம் படத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகள் என்ன?
ருத்ரனை ஏன் காசியில் கொண்டு விட்டார்கள்? ஜோசியக்காரர் சொன்னதாலா? பெற்றோர்களின் சுய நலம், பேராசையாலா? ருத்ரன் வேதம் படிக்கவேண்டும்என்பதற்காகவா? அல்லது மாபியா கூட்டத்தைஒழிப்பதற்காகவா?
இறைவனின் படைப்புகளில் பிழைகள் இல்லை என்றால் இவர்களை யார்படைத்தது? பூர்வ ஜென்ம பலனா? சமூகத்தின் பார்வையில்தான் கோளாறா?
அன்றாட பிழைப்பே கேள்விக்குறியான இவர்களுக்குள் நகைச்சுவை, பாசம், காதல் போன்றவை எல்லாம் எப்படி வந்தது? இவர்களுக்கும் வாழ்வில் நம்பிக்கைஉள்ளதாலா? கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையாலா?
இப்படி ஏகப்பட்ட பதில் தெரியாத கேள்விகளை எழுப்பி உள்ளார் பாலா.

நான் கடவுள் - நம்ம ஊர் ஆஸ்கார் திரைப்படம்

Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar