கடல் நடுவே ஒரு கவிதை
ஆர்பரிக்கும் ஆழ்கடலின் மேற்பரப்பில்
ஆறடியில் அழகிய அரண் அமைத்தேன்.துள்ளித்திரியும் மீனினத்தை,
அள்ளி வந்து அதில் வளர்த்தேன்.
சிந்தனை வித்துக்களை விதைத்து,விந்தையாக பெயர் இட்டேன், "நான்" என்று.
அரண் ஏறி பார்த்தேன் அருகருகே பல அரண்கள்,
'நீ' என்றும் 'அவன்' என்றும்,
'அது' என்றும், 'இது' என்றும்.
பிரமிக்கும் தருணத்தில் சீறி வந்தது பேரலை ஒன்று.
அரண் அனைத்தும் சூன்யத்தில் கரைந்து விட,'நான்' எங்கே?, 'நீ' எங்கே?, 'அவன்' எங்கே?
ஆழ்கடலே பதில் சொல்லு.
i'm gonna make my own blog
ReplyDelete