அனைவரும் அஹமதாபாதில்




வைஷ்ணோதேவியை தரிசிக்கணுமா?......
கத்ராவுக்கு(ஜம்மு) போங்க.

பனிலிங்கம் தரிசிக்கணுமா?......
அமர்நாத்துக்கு போங்க.

பாலாஜியை தரிசிக்கணுமா?......
திருப்பதிக்கு போங்க.

மூன்றையுமே தரிசிக்கணுமா?.....
அஹமதாபாதுக்கு போங்க.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். மேற்கூறிய அனைத்தையும் அஹமதாபாதில் காணலாம். அனேகமாக அனைவருமே பக்திமான்கள்தான். அவர்களின் ஆவலை தீர்ப்பதற்காகவே அத்தனை ஸ்தலங்களையும் அங்கே உருவாக்கியிருக்கிறார்கள். வைஷோதேவியை போலவே இங்கும் குகைகள். குகைக்குள்ளே அழகான வைஷ்ணோதேவி. ஜெய் மாதா தீ..... என்று பக்தர்கள் ஆரவாரத்தோடு உள்ளே நுழைகிறார்கள். மாதாவின் டாலர் பெறுகிறார்கள்.
அமர்நாத்தில் உள்ளது போலவே நெடிய நடை பயணத்துக்கு பின் குகைக்குள் சிவலிங்கம். மற்றும் த்வாதச ஜோதி லிங்கங்கள் (பன்னிரண்டு- சோம்நாத், ஸ்ரீ சைலம், மகாகாலேஷ்வர்-உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர்-ம.பி, கேதார்நாத், பீமாஷங்கர்-பூனே, காசி, த்ரியம்பகேஷ்வர்-நாசிக், பைதியனாத்-ஜார்கண்ட், நாகேஷ்வர்-த்வாரகா, ராமேஸ்வரம், கிரிஷ்நேஷ்வர்-எல்லோரா). ஒவ்வொன்றும் ஒரு குகைக்குள்ளே.
கோவிந்தா, கோவிந்தாவென்று திருப்பதியை நினைவு படுத்தும் விதமான பாலாஜி கோவில். வெங்கடேச பெருமாள் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். பக்தர்கள் லட்டு பிரசாதம் பெறுகிறார்கள்.
ஐந்து மணி நேரத்தில் மூன்று கோவிலுக்கும் சென்ற திருப்தி நமக்கு வந்து விடுகிறது.

Comments

Popular posts from this blog

The Garden Fire

Namasivaya and Sivayanama - What I read, Want to Share