மார்கழி மஹோத்சவம்
மார்கழி திங்கள் மடி நிறைய பொங்கல் என்று பாடிய காலம் மலை ஏறி போய்விட்டது. மார்கழி காலைப் பனியைப் பாராட்டாமல் பெருமாள் கோவிலுக்குப் போய் கையை நீட்டினால் சுட சுட வந்து விழும் வெண் பொங்கல். திருப்பாவையில் வருவது போல நெய் வழிந்து ஓடும். சின்னஞ்சிறு வாண்டிலிருந்து ஊர் பெரிசுகள் வரை குழுமி நிற்கும். ஆஹா தேவாம்ரிதம். .....ம்ம்.... என்ன செய்வது. காலம் மாறிப்போச்சு. கொழ கொழவென பிட்சாவை வாயில் கவ்வி குதப்பும் கண்ராவிகளைத்தான் காணமுடிகிறது. ஆனாலும் கண் கவரும் இந்த கலர் கோலக்காட்சி மனதுக்கு சந்தோஷத்தை தரும் என்று ப்ளோகி இருக்கிறேன்.
Comments
Post a Comment