Chandrayaan - Mission to Moon


வானில் நீந்தும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடக்கும். காற்றில் ஏறிப் பயணம் செய்ய பாதை அங்கே இருக்கும்.

சந்த்ரயானா? சந்த்ராயன்னா ? முதலில் பெயர் விளக்கம்.
சந்த்ரயான்தான். இந்த வார்த்தை சமஸ்கிருதத்தில்இருந்து வந்தது தான். "சந்திரா" என்றால் நிலா, "யான்" என்றால்வானூர்தி. குழப்பத்தில் ஆழ்த்தியது தொலைக்காட்சியின் பணி. சரி விஷயத்துக்கு வருவோம். இந்த "நிலாஊர்தி", அட நன்றாக இருக்கிறதே! என்ன செய்யப்போகிறது, எப்படி செயல் படுகிறது, என்பதையெல்லாம் பார்ப்போம். விஞ்ஞான நோக்கம் என்னவென்றால், தொலை ஆய்வின் மூலம், நிலவை தெளிவாக நான்கு விதங்களில் (Visible, near infrared(NIR), low energy X-rays and high-energy X-ray regions) படம் எடுத்து பூமிக்கு அனுப்புவது. விலாவாரியாக சொல்வது என்றால்,நிலவின் நெருங்கிய, மற்றும் தொலைவுப்பகுதியை சுமார் ஐந்து முதல் பத்து மீட்டர் உயரத்தில் இருந்து படம் பிடித்து முப்பரிமாண வரைபடம் தயாரித்து அனுப்புவது. மக்னீசியம், அலுமினியம், சிலிகான், கால்சியம், இரும்பு மற்றும் டைடானியம் போன்ற தாதுக்கள், மேலும் ராடான், யுரானியம், தோரியம் போன்ற கதிர் வீச்சுள்ள உலோகங்கள் பற்றி ரசாயன ஆய்வுகளை மேற்கொள்வது. இப்படி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலம், நிலவின் தோற்றம் , மேற்பரப்பு, உள்ளமைப்பு, எரிமலைகள் போன்றவற்றையும், பூமியின் ஆரம்ப காலங்களையும் அறிந்து கொள்வது. இந்த ஆய்வுக்காக இரண்டு முறைகளை கையாள்கிறது இந்த சந்திரயான். தாதுக்களை ஆய்வதற்கு பிரதிபலிப்பு நிறமாலை (Reflective Spectrum), உலோகங்களை ஆய்வதற்கு பிலோரசென்ட் எக்ஸ்- ரே நிறமாலை (Flourescent X-Ray Spectrum) கதிர்களை உபயோகப்படுத்துகிறது. இந்த சந்திரயான் விண்கலம் நிலவின் துருவப்ப்ரதேசத்தை வட்டமிடும் என்பது கூடுதல் சாதனையாகும்.
சந்த்ரயானில் என்னென்ன இருக்கிறது ? பார்ப்போம். Science payloads எனப்படும் ஆராய்ச்சிப்பொருட்கள், லான்ச் வெஹிக்கில் மற்றும் ஆழ்வெளி வலை நிலையம் (Deep Space Network station) இவை அனைத்தையும் தாங்கிகொண்டுதான் சந்திரயான் வானில் பயணப்பட்டது. ஸ்ரீ ஹரிக்கோட்டா சதீஷ் தவான் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலாஊர்தி நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது. சந்த்ரயானை தாங்கிய PSLV-XL பூமியை குறைந்த பட்சமாக 257 Km அதிக பட்சம் 22,858 Km தொலைவாகவும் சுற்றி வந்து பயணத்தை தொடர்ந்தது. பின் Liquid apogee motor எனப்படும் (இவை அனைத்தும் உள்ளூர் தயாரிப்புதான்) கருவி மூலம் சந்திரனை நோக்கி பாதை திருப்பி விடப்பட்டு புதிய நீள் வட்டப்பாதையை அடைந்தது.இந்தப்பாதையின் விட்டம் எவ்வளவு தெரியுமா? 199277 km முதல் 269201 Km தான், வாயைப்பிளக்காதீர்கள். இந்தப்பாதையின் அளவு 1019 Km ஆக குறைக்கப்பட்டு நீள் வட்டமாக ஆக்கப்படுகிறது.நிலவை நெருங்கியவுடன் சந்திரயான் வேகம் படிப்படியாக குறைக்கப்படுகிறது. இதன் மூலமாகத்தான் சந்திரயான் நிலவின் ஈர்ப்பு சக்தியினால் தன் பாதையில் இழுக்கப்படுகிறது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலவை நெருங்கி நூறு கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று நிலவைச் சுற்றுகிறது. சந்திரயானில் இருந்து MIP எனப்படும் நிலா ஆய்வுக்கருவி நிலவை நோக்கி செலுத்தப்பட்டு பாரத தேச மூவர்ணக்கொடி பதிக்கப்படுகிறது. தொடந்து இரண்டு வருடகாலம் நிலவிலேயே தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப்போகிறது சந்திரயான்.
சந்திரயான் பற்றி சில தகவல்கள்: 1.5 மீட்டர் அளவு கொண்ட சதுரப்பெட்டி. பூமியில் சந்த்ரயானின் எடை 1380 kg, நிலாவில் 675 kg. மொத்தம் பதினொரு விஞ்ஞான கருவிகள் (payloads) தாங்கும் வசதி கொண்டது. 750 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்ட சூரிய சக்தி தகடுகள். லித்தியம் - அயான் மின் கலம் (இருள் பகுதியில் பயணம் செய்யும் போது). 0.7 மீட்டர்விட்டமுள்ள X-Band ஆண்டெனா தகவல்களை அனுப்புவதற்கு. டேளிமேட்ட்ரி, ட்ராக்கிங் அண்ட் கமான்ட் (S-பேண்ட்) கருவி. 32Gb மெமோரி தகவல் பதிவு செய்வதற்கு.
இவ்வளவு சக்தி வாய்ந்த சந்திரயானை முதல் முயற்சிலேயே வெற்றி பெறச் செய்த இந்திய விஞ்ஞானிகளுக்கு நமது மனமார்ந்த பாராட்டுதல்கள்.

Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar