தியானலிங்கம் பார்க்கலாம் வாங்க!
கோயம்புத்தூர் நகரிலிருந்து கிட்ட தட்ட முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலை சாரலில் அழகான இயற்கை சூழலில் உள்ளது ஈஷா யோக மையம். வாகனம் செல்லும் பாதையின்இரு புறத்திலும் பாக்கு மரங்கள்,அடர்ந்த காடுகள். மலைத்தொடரின் மேல்புறத்தில் வெண் நிற போர்வைபோர்த்தியது போல அழகானமேகங்கள்.சிறுவாணி அணைக்கு செல்லும் வழியில் வலது பக்கமாக திரும்பி பூண்டி சாலையில் பயணித்தால் வருவது ஈஷா யோக மையம். சிலு சிலுவென காற்று நம் உடலைத்தழுவ யோக மையத்துக்கு சென்றவுடன் நம்மை இனிய முகத்தோடு வரவேற்பது ஈஷாசேவகர்கள். நம் குடும்பத்தினர் வீட்டுக்கு செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. நம் பாத அணிகள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். கார் பார்க்கிங், cloak room செலவுகளுக்கு மொத்தமாக விடுதலை அளித்துள்ளார்கள் ஈஷா சேவகர்கள். தியானலிங்கம் கோவிலுக்குள் செல்வதற்குமுன் கோவில் பற்றியும் தியானம் பற்றியும் தெளிவாக விளக்குகிறார்கள். இந்த தியான லிங்கம் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களினால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதனால் லிங்கத்துக்கு பூஜை போன்ற சடங்குகள் செய்யப்படுவதில்லை. எம்மதத்தினரும் கோவிலுக்கு செல்லும் வண்ணம் அனைத்து மதத்தின் சின்னமும் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளது. தியானலிங்கத்தை தரிசிக்குமுன் பாதரச லிங்க குளத்தினில்இறங்கி குளித்து விட்டுசெல்வதற்கு ஏற்றவாறு உடைகள் வழங்கப்படுகிறது. பாதரசம் யோக பலத்தின் மூலமாக திடப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது காண்பவரை பிரமிக்க வைக்கிறது. குளத்தின் மேற்கூரையில் மூலிகைகளைக்கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. குளத்தில் குளித்தவுன் ஒரு புதிய உணர்வு தோன்றுகிறது. தியானலிங்கத்தை காணச்செல்லும் வழியில் முதலில் இருப்பது பதஞ்சலி முனிவர் சிலை. தொடர்ந்து சென்று தியான லிங்கத்தை காணும் போது பரவச நிலை ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. ஒரு அரைக்கோளத்தை கவிழ்த்து வைத்ததுபோல அமைக்கப்பட்டிருக்கிறது தியான மண்டபம். நடுவே தியான லிங்கம். சுற்றிஅமர்ந்து தியானம் செய்வதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமைதி முழுமையாக அனுசரிக்கப்படுகிறது. சுமார் இருபது நிமிடம் அமர்ந்து தியானம் செய்யும்போது ஒருவிதமான அதிர்வுகள் நம் உடலில் ஏற்படுவதை உணர முடிகிறது. மண்டபத்துக்கு வெளியில் ஈஷா யோக மையத்தின் விற்பனை கூடம். இங்கு சத்குருவின் பிரசங்கங்கள் அடங்கிய ஆடியோ மற்றும் வீடியோ தகடுகள் கிடைக்கிறது. உணவுக்கூடமும் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது. மொத்தத்தில் தியானலிங்கம் தரிசனம் ஒரு புதிய அனுபவம்.
Very nice article with required informations.
ReplyDelete