Travelogue: Leh Ladakh
உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்! (பாகம்-3) மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு என்று சொல்லியிருந்தேன் அல்லவா, புதிதாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்காக லடாக் வந்திருந்தவர்கள் அணிவகுப்புதான் அது. விமான நிலையத்திலேயே அனைத்து ராணுவத்தினரையும் ஒன்று சேர்த்து பின்னர் அவர்களை அணிவகுத்து அழைத்து சென்று கொண்டிருந்தார்கள். அனைத்து ராணுவத்தினரும் சுமார் பதினெட்டிலிருந்து இருபத்து ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது, அவர்களுக்கு மரியாதை செலுத்த எண்ணம் தோன்றியது. ஒரு சல்யூட் செலுத்தி விட்டு எங்களை தங்குமிடத்துக்கு அழைத்து செல்ல வந்த காரை நோக்கி நகர்ந்தோம். காற்றில் பிராண வாயு குறைந்ததை கொஞ்சம் கொஞ்சமாக உணர முடிந்தது. ஐந்து டிகிரி ஏற்றத்தை கூட திணறி திணறித்தான் என்ற முடிந்தது. ஒரு முக்கிய தகவல்: லே லடாக் பயணம் செய்ய விரும்புபவர்கள் அவசியம் நல்ல உடல் நிலை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, மூச்சு திணறல், ஆஸ்த்துமா உள்ளவர்கள் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது நல்லது. கைவசம் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் வைத்துக்கொள்வது சாலசிறந்தது. டீஹைட்ரேஷன் எனப்ப...


Nice photos.The direction of shadows expose the difference.
ReplyDelete