உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்! (பாகம்-2 ) முக்கிய தகவல். லே-லடாக் செல்லுவதற்கு உகந்த காலம் என்பது மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை. எனவே ஜூன், ஜூலை மாதங்கள் சிறந்தது. உலகத்தின் அதிகப்படியான உயரத்தில் உள்ள விமான நிலையங்களில் முதலில் வருவது "குஷக் பகுளா ரிம்போஷி" விமான நிலையம்தான். தரை மட்டத்துக்கு சுமார் 10500 அடிக்கு மேலே அமைந்துள்ளது லே விமான நிலையம். இந்த விமான நிலையத்துக்கு புது தில்லியிலிருந்தும், மும்பையிலிருந்தும் நேரடி விமானங்கள் உள்ளன. பெரும்பாலும் தூங்கி வழிந்துகொண்டு வரும் பயணிகள் கூட உத்திரகாண்ட், இமாச்சல பிரதேசத்தை விமானம் கடக்கும்போது பரபரப்பாகி மொபில் காமிராவை தயாராக வைத்துக்கொண்டு விமானத்தின் ஜன்னலை நோக்கி தாவுகிறார்கள். வெளியில் கொள்ளை அழகு. கரும்பச்சையில் ஆரம்பிக்கும் இயற்கையின் அழகு, பளீர் வெண்மையில் முடியும். அடர்ந்த மலைக்காடுகள், நடு நடுவே செம்மண் தீட்டியது போன்ற சிகரங்கள், இடை இடையே நீண்டு வீழும், வெண்ணிற அருவிகள், நீல நிறத்தில் தேங்கியுள்ள நீர்த்தேக்கங்கள், இவை யாவும் இமாச்சலப்பிரதேசத்தை தாண்டும் போது மாறுகிறது. மலை சிகரங்களில் திட்டு திட்டாக வெ...
Comments
Post a Comment