Posts

Travelogue: Leh Ladakh

 உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்! (பாகம்-3) மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு என்று சொல்லியிருந்தேன் அல்லவா, புதிதாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்காக லடாக் வந்திருந்தவர்கள் அணிவகுப்புதான் அது. விமான நிலையத்திலேயே அனைத்து ராணுவத்தினரையும் ஒன்று சேர்த்து பின்னர் அவர்களை அணிவகுத்து அழைத்து சென்று கொண்டிருந்தார்கள். அனைத்து ராணுவத்தினரும் சுமார் பதினெட்டிலிருந்து இருபத்து ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது, அவர்களுக்கு மரியாதை செலுத்த எண்ணம் தோன்றியது. ஒரு சல்யூட் செலுத்தி விட்டு எங்களை தங்குமிடத்துக்கு அழைத்து செல்ல வந்த காரை நோக்கி நகர்ந்தோம். காற்றில் பிராண வாயு குறைந்ததை கொஞ்சம் கொஞ்சமாக உணர முடிந்தது. ஐந்து டிகிரி ஏற்றத்தை கூட திணறி திணறித்தான் என்ற முடிந்தது. ஒரு முக்கிய தகவல்: லே லடாக் பயணம் செய்ய விரும்புபவர்கள் அவசியம் நல்ல உடல் நிலை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, மூச்சு திணறல், ஆஸ்த்துமா உள்ளவர்கள் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது நல்லது. கைவசம் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் வைத்துக்கொள்வது சாலசிறந்தது. டீஹைட்ரேஷன் எனப்ப...

Travelogue - Leh Ladakh

 உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்! (பாகம்-2 ) முக்கிய தகவல். லே-லடாக் செல்லுவதற்கு உகந்த காலம் என்பது மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை. எனவே ஜூன், ஜூலை மாதங்கள் சிறந்தது. உலகத்தின் அதிகப்படியான உயரத்தில் உள்ள விமான நிலையங்களில் முதலில் வருவது "குஷக் பகுளா ரிம்போஷி" விமான நிலையம்தான். தரை மட்டத்துக்கு சுமார் 10500 அடிக்கு மேலே அமைந்துள்ளது லே விமான நிலையம். இந்த விமான நிலையத்துக்கு புது தில்லியிலிருந்தும், மும்பையிலிருந்தும் நேரடி விமானங்கள் உள்ளன. பெரும்பாலும் தூங்கி வழிந்துகொண்டு வரும் பயணிகள் கூட உத்திரகாண்ட், இமாச்சல பிரதேசத்தை விமானம் கடக்கும்போது பரபரப்பாகி மொபில் காமிராவை தயாராக வைத்துக்கொண்டு விமானத்தின் ஜன்னலை நோக்கி தாவுகிறார்கள். வெளியில் கொள்ளை அழகு. கரும்பச்சையில் ஆரம்பிக்கும் இயற்கையின் அழகு, பளீர் வெண்மையில் முடியும். அடர்ந்த மலைக்காடுகள், நடு நடுவே செம்மண் தீட்டியது போன்ற சிகரங்கள், இடை இடையே நீண்டு வீழும், வெண்ணிற அருவிகள், நீல நிறத்தில் தேங்கியுள்ள நீர்த்தேக்கங்கள், இவை யாவும் இமாச்சலப்பிரதேசத்தை தாண்டும் போது மாறுகிறது. மலை சிகரங்களில் திட்டு திட்டாக வெ...

Travelogue - Leh, Ladakh

 உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்! (பாகம்-1) இந்த பயண தொகுப்பை தங்களோடு பகிர்வதற்கு இவ்வளவு காலம்  ஆனதற்கு காரணம் இல்லாமலில்லை.  கடந்த 2020 ஆண்டு முதலே நம் பாரதத்துக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் தொடர்ந்து எல்லை பிரச்சினை இருந்துகொண்டே தான் இருந்தது. டோக்லாமில் துவங்கி, கிழக்கு லடாக் பகுதிவரையில் மோசமான தாக்குதல்களில் இரு நாடும் ஈடுபட்டு, கணிசமான உயிர்த்தியாகங்களை இருநாடுகளும் சந்தித்தன. கலவரப்பகுதியாகவே இருந்து வந்த இந்த இமய மலைப்பகுதிக்கு இப்போது ஓரளவு தீர்வு கிட்டி உள்ளது என்றே கருதலாம். இரு நாடுகளும், தமது ராணுவத்தை பின்னேற செய்தது நமக்கு நிம்மதியை தந்துள்ளது. ஏற்கனவே இந்தப்பகுதியில், இரு நாடுகளும் பல வளர்ச்சிப்பணிகளை செய்திருக்கிறார்கள் என்பது நிதர்சனம். எனவே இந்த நல்ல தருணத்தில் என்னுடைய பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்வது என்று முடிவெடுத்து இந்த பயண கட்டுரையை துவங்குகிறேன். உங்கள் மேலான ஆதரவுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி பாராட்டுகிறேன். 2019 ம் ஆண்டு வரை, ஒரு மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் யூனியன் மற்றும் லடாக் யூனியன் என்றா...
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-25 ) உண்மை நின்றிட வேண்டும்!!! ஓம்! ஓம்! ஓம்! கடந்த 24 பாகங்களின் மூலம் என்னுடைய ஐரோப்பிய பயணத்தின் சில சுவையான, உபயோகமுள்ள அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். இந்த 25 வது பாகமானது இந்த உரையாடலின் கடைசி அத்தியாயம். இதில், வியானாவிலிருந்து மீண்டும், பிராங்கபார்ட் வந்த அனுபவமும், ஏற்கனவே கூறிய சில முக்கிய தகவல்களின் தொகுப்பும் தரவுள்ளேன். ஏர் பீ என் பீயை காலை செய்துவிட்டு மீண்டும் சாவியை அந்த பெட்டியிலே வைத்துவிட்டு மாலை ஐந்து மணிக்கே கிளம்பிவிட்டோம். ரயில் 10 மணிக்கு தான். அது வரை கையில் உள்ள பெட்டிகளை வைக்க ஒரு தனியார் சாமான்கள் வைக்கும் அறையை வாடகைக்கு எடுத்து, பொருட்களை வைத்து விட்டு, வியன்னா சாலையோர பஸாருக்கு சென்று 'டி' ஷர்ட்டுகள், பொம்மைகள், என்று சிலவற்றை வாங்கினோம். அங்கிருந்த பெரும்பாலான பொம்மைகளில் 'மொசார்ட் ' இசைகொண்ட சிறு சிறு இசைக்கருவிகள்தான் அதிகம். மொசார்ட் இசையை தனது அடையாளமாகவே கொண்டுள்ளார்கள் அந்த நாட்டினர். அந்த பஸாரில், பஞ்சாபை சேர்ந்த சிலர் கடைகள் வைத்துள்ளார்கள். தேவைப்பட்டவை எல்லாம் வாங்கி கொண்டு, வாடகைக்கு வைத்துவிட்ட...
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-24 ) கண் திறந்திட வேண்டும்!!! முதலில் நாங்கள் தேர்வு செய்த இடம், ஷோம்பிருன் (Schonbrunn ) அரண்மனை. வியன்னா செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் இது முதன்மையானது. ஹாபிஸ்புர்க் ராஜ பரம்பரையின் வெயில்கால இருப்பிடம். இந்த பிரமாண்ட அரண்மனையின் சுற்றிலும் மிகப்பெரிய தோட்டமும் பூங்காவும் உள்ளது. குட்டையான மரத்தில் கொத்து, கொத்தாக ஆரஞ்சு பழங்கள் விளைந்துள்ளன. இந்த அரண்மனையில் உலக புகழ் பெற்ற மொசார்ட் (Mozart ) தன்னுடைய சிம்பொனியை இசைத்ததாக சொல்லப்படுகிறது. நமது இசைஞானி இளையராஜாவும் இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தாராம். அரண்மனையின் சிற்ப வேலைப்பாடுகள், என்னை பிரமிக்க வைத்தது. இரு தலை கொண்ட மனிதன், தன் காதலியோடு நடனமாடுவது போல இருந்த சிலை மிக அற்புதம்.  இங்கு ஒரு முக்கிய தகவல். வியன்னா சிட்டி டிக்கெட் வாங்கியவர்கள் தனி தனியாக டிக்கெட் வாங்க தேவை இல்லை. வியன்னா ஐரோப்பிய நாடுகளில் மிகவும் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியை தரும் நகரம். இங்கு, வீடு வாடகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆதலால், செலவு குறைவு. பொருட்களும் மலிவாக கிடைக்கிறது. இ...
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-23 ) மண் பயனுற வேண்டும்!!! பஞ்சாபி ஹோட்டலில் இரவு உணவை முடித்துக்கொண்டு நாங்கள் செல்லவேண்டிய 'ஏர் பீ என் பீ' விடுதியான வீட்டிற்கு டிராம் பிடித்து சென்றோம். அது என்ன 'ஏர் பீ என் பீ' என்று கேட்கிடீர்களா? இது ஒருவகையான பயணிகள் தங்கும் விடுதி என்றே கூறலாம். இது போன்ற வசதிகள் இப்போது இந்தியாவில் கூட வந்து விட்டது. அதாவது, சில பணவசதி படைத்தவர்கள், தனக்கு சொந்தமான வீட்டை, சகல வசதிகளையும் செய்து கொடுத்து வாடகைக்கு விடுவதுதான் 'ஏர் பீ என் பீ'. இந்த வீடுகள், நாள் வாடகை தொடங்கி, மாத வாடகை வரை கிடைக்கும். இந்த வீட்டை கிட்ட தட்ட நம் சொந்த வீட்டை போன்றே பயன்படுத்தலாம். மளிகை சாமான்களை வாங்கி கொண்டு சமையல் செய்து சாப்பிடலாம், துணி மணிகளை துவைத்து காய போடலாம், இல்லாவிட்டால் என்னை போன்ற சோம்பேறிகள், சும்மா தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்தலாம். வாடகையில் பெரிய வித்தியாசம் இருக்காது, ஆனால், ஹோட்டலில் உள்ள கூட்டம் இருக்காது.  இங்கு ஒரு தகவல். ஏர் பீ என் பீயை ஆன்லைனில், பதிவு செய்யும்போது, அந்த வலைத்தளம் நேர்மையானது தானா? என்று தெரிந்து கொண்டு பதிவு செய்யவேண்...
Image
 ஐரோப்பா அழைத்தது (பாகம்-22 ) தரணியிலே பெருமை வேண்டும்!!! அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய நாடு ஆஸ்திரியா. ஆஸ்திரியா பல அதிசயங்களை, ரகசியமாக தன்னுள் வைத்திருக்கும் மிகவும் அழகிய நாடு. இதன் தலைநகரம் வியன்னா. இதுவும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. நிறைய நோபல் லாரெட்டுகளை உருவாக்கிய நாடுகளில் இதுவும் ஒன்று. 22 நோபல் பரிசுகளை பெற்று இருக்கிறது. வரலாறுகள் நிறைந்து காணப்படும் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவுக்கு போவதற்காக, காலை 11 :30 க்கு ரயிலை பிடித்தோம். வியன்னாவுக்கு நேரடியாக செல்லும் ரயில் கிடைக்காததால், ஜெர்மனியின் 'மூனிக்' (Munich ) வரை சென்று அங்கிருந்து வியன்னாவுக்கு ரயில் மாற வேண்டும். இடையில் அரை மணி நேர இடைவெளி. மொத்த பயண நேரம் எட்டு மணி. ஆனால், என்ன சோதனையோ நாங்கள் சென்ற ரயில், ஆங்காங்கே நின்று நின்று சென்றது. பிறகுதான் தெரிந்தது, ஜெர்மனியில் ரயில் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருவதாகவும், அதனால் ரயில்கள் குறித்த நேரத்தை கடை பிடிப்பது இல்லை என்ற தகவல்கள். ஒன்றரை மணிக்கு மூனிக்குக்கு வந்து சேர வேண்டிய ரயில் சரியாக அரை மணி நேரம் தாமதமாக வந்தது. ...