தீபாவளி ஸ்பெஷல் - சிந்தனைக்கு
சிந்திக்க வேண்டிய விஷயம்-2
இந்த படத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த யுகத்தின் தவிர்க்க முடியாத பிறவிகள். எலக்ட்ரானிக் சிப் தான். இதில் பயன்படுத்தப்படும் 'கபாசிட்டர்' என்ற பொருள் 'டான்ட்டலம்' என்ற மூலப்பொருளிலிருந்து பெருமளவு தயாரிக்கப்படுகிறது. இந்த டான்ட்டலம் என்ற மூலப்பொருளை பூமியிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்காக வெட்டப்பட்ட சுரங்கங்களினால் பல காடுகள் உலகம் முழுவதிலும் அழிக்கப்படுகின்றன. இதில் முக்கிய பங்கு வகிப்பது இந்தோனேசியா போன்ற கிழக்கிந்திய நாடுகளும், சில ஆப்பிரிக்க நாடுகளும்தான். இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுகளில் பல காலங்களாக காடுகள் அழிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாகத்தான் இன்று நாம் காணும், 'சுனாமி', 'பூகம்பம்' போன்ற இயற்கை பேரழிவுகள். இந்த நிலையில் டான்டலம் என்ற மூலப்பொருளின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போவது மேலும் வேதனைக்குரிய விஷயம். இன்று நாம் பயன்படுத்தும் 'செல்லிடர் தொலைபேசி' இந்த பேரழிவிற்கு பெரிதும் துணை போகிறது என்பது நிதர்சனமான உண்மை. இந்தியாவும், சீனாவும் தான் உலகில் அதிகப்படியான அளவில் 'செல்போனை' பயன் படுத்துகிறது. இந்த நாடுகளில் தினம் ஒரு மாடல், தினம் ஒரு நிறுவனம் என்று போட்டா போட்டிக்கொண்டு செல்போன் உபயோகத்தை நம்மிடம் திணித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த விழிப்புணர்வு முக்கியமாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகம் தேவைப்படுகிறது. மாதத்துக்கு ஒரு முறை செல்போன் மாற்றும் எண்ணத்தை விட்டொழித்தால் நம்மால் இயன்ற அளவுக்கு இயற்கையின் சீற்றத்தை தவிர்க்கலாம்.
Comments
Post a Comment