அந்த அரபிக் கடலோரம்......

இந்த குழந்தைகள் யார்?

அரபிக் கடலின் அழகை ரசித்துக்கொண்டே "பெட் துவாரகா" சென்று கொண்டிருந்த போதுநான் கண்ட காட்சிதான் இது. மிக ஆழமான அரபிக் கடலில் நீந்திக்கொண்டிருந்தனர்நாலைந்து சிறுவர்கள். பத்திலிருந்து-பதினாலுவயதுக்குள் இருந்த இவர்களின்தைரியத்தை மெச்சிக்கொண்டேஅவர்கள் செயலைகவனித்தேன். திடீரென்றுதண்ணீருக்குள்ளே செல்வதும், பின்னர் மேலே வருவதும், அண்ணாந்து மேலேசெல்பவர்களை பார்ப்பதுமாக இருந்தனர். நிச்சயமாக அவர்கள் நீச்சல் அங்கே பயிலவில்லை. பின்னர் என்ன செய்கிறார்கள் என்று கவனித்த போது அதிர்ந்துபோனேன். உங்களுக்கும் அதிர்ச்சி தரும் இந்த விபரீத செயல்.
இந்தியாவின் மேற்கு மூலை என்று "பெட் துவாரகா"வை சொல்லலாம். குஜராத்மாநில மாங்காயின் மூக்குப்பகுதி. இந்த மூலையில் சமுத்திர தானம் செய்வதுபுனிதமாக கருதப்படுவதால், நமது மகாஜனம் வழக்கம் போல பிச்சைகாரர்களுக்கு எரிவதுபோல், சில்லறையை தூக்கி கடலில் எறிகிறார்கள். இந்தசில்லறை தண்ணீரில் மூழ்கியவுடன் அதை பொறுக்குவதாகவே சிறுவர்கள் இந்தவிபரீத செயலில் ஈடு படுகிறார்கள். பொரி, மற்றும் தானியங்கள் எறிவது கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாக அமைவதால் இந்த வழக்கம் நிலவி வருகிறது, சில்லறையை எரியும் செயல் பல குழந்தைகளின் உயிருக்கு உலை வைக்கிறது. நமது மூட பழக்கங்களுக்கு பலியாகும் இந்த குழந்தைகளுக்கு என்று விடிவுபிறக்கும்?

Comments

Post a Comment

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar