வில்லுடையான் பட்டு கோவில் - நெய்வேலி


வில்லுடையான்பட்டு திருக்கோவில் குடமுழுக்கு விழா 20-04-2009 அன்று நடைபெற இருக்கின்றது. இந்த கோவிலின் சிறப்பு பற்றி இப்போது பார்ப்போம்.
சுமார் 500 வருஷங்களுக்கு முந்தையதாக கருதப்படுகிறது இந்த கோவில். பல்லவர் காலத்தில் உருவமைக்கப்பட்டது இந்த கோவில் மூலவராக திகழும் முருகப்பெருமானின் சிலை. வேறு எந்த ஊரிலும் இல்லாத சிறப்பம்சமாக முருகப்பெருமான் இடது கையில் வில்லுடனும், வள்ளி தெய்வானையுடனும் திகழ்கிறார். வள்ளியை திருமணம் செய்வதற்காக குறவர்களுடன் போர் புரிந்து வெற்றி கொண்டு வள்ளியை மணம் முடித்ததாக தல வரலாறு சொல்கிறது. அருணகிரிநாதரின் பாடல்களில் இடம் பெற்றுள்ளது இந்த ஸ்தலம். பங்குனி உத்திரதிருவிழா இங்கு ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக கொண்டாட படுகிறது.
அமைந்துள்ள இடம்:
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ளது இந்த கோவில். சென்னையிலிருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த கோவிலின் பராமரிப்பு தேவைகளுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெறும் துணையாக இருக்கிறது. வரும் இருபதாம் தேதி குட முழுக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது.

Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar