பூங்கா
பூங்கா என்றாலே குழந்தையாகஇருந்தாலும் சரி, பெரிசுகளாகஇருந்தாலும் சரி, கொண்டாட்டமும்குதூகலகமும்தான். விடுமுறைநாட்களின், மாலைவேளைகளில் அனேகமாகஎல்லா பூங்காக்களுமே நிரம்பிவழிகின்றன. அன்றாடவேலைகளிலிருந்து விடுதலைபெற்றுக்கொண்டு இரண்டு, மூன்று மணி நேரங்களைபூங்காவில்செலவழித்தால்தான் ஒரு புத்துணர்வு நமது உடம்பிற்குள் ஊடுருவுகிறது. இல்லை என்றால் "உம்முனாமூஞ்சி"யைப்போல் உலா வரவேண்டியிருக்கிறது. மற்றபடி "பிராண வாயு நிறைய கிடைக்கிறது, நூறு வருடம் வாழலாம்" என்பதுஎல்லாம் சுத்த டபாய்த்தல். இந்த புகை மண்டலத்தில் (அட, வாயுமண்டலம்தானுங்க) பிராண வாயுவை தேடியே பிராணன் போய் விடுகிறது. அப்புறம் எங்கே நூறு வருடம்? நமக்கு அந்த ஆசையெல்லாம் இல்லீங்க, 'இருக்கிற மூஞ்சியை ஏன் உம்முனாமூஞ்சியாய் ஆக்கணும்?' அப்படீங்கிறநோக்கத்துலதான் இப்போதும் பூங்காவிற்கு வந்து கொண்டிருக்கிறேன். வழக்கம்போலவே இன்றைக்கும் பூங்காவில் கூட்டத்துக்கு பஞ்சமில்லை. அங்கும், இங்குமாக சிறுசுகளும், பெரிசுகளும், சிறிய-பெரிசுகளும், பெரிய-சிறிசுகளும் ஓடி, ஆடி விளையாடுவதை பார்க்கும் போது மனசுக்கு இதமாகஇருக்கிறது. பசுமையான...