பெருமாள் மலை

பெரம்பலூர் மாவட்டம், துறையூருக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அழகான மலைக்கோவில்தான் பெருமாள் மலை. சுமார் ஆயிரத்து ஐந்நூறு படிகள் கொண்ட இந்த மலைக்கு வாகனங்கள் செல்ல வசதியாக சாலை போடப்பட்டிருக்கிறது. நான் பத்து, பன்னிரண்டு வயதிருக்கும்போது துறையூரிலிருந்து ஒவ்வொரு புரட்டாசி சனியன்றும் சென்று விடுவேன். வழி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால் இரண்டு படிக்கொரு பிச்சைக்காரரை பார்க்கலாம். "கண்ணில்லா பாவத்தைபாரு" என்ற ஓலக்குரல் இன்றும் என் காதில் விழுந்து கொண்டிருக்கிறது. கிட்ட தட்ட முப்பத்தி மூன்று வருடங்களுக்கு பிறகு பெருமாள் மலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

கோவில் இப்போது மெருகு கூடி இருக்கிறது. ஓரளவு பெரிய வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலை போட்டிருக்கிறார்கள். 'கிரிவலம்', உற்சவம் எல்லாம் அடிக்கடி நடக்கிறது. மலை உச்சியில் இருந்து துறையூரின் அழகை ரசிக்கலாம்.
அர்ச்சகர் கோவிலின்
ஸ்தலப்புராணத்தை அர்ச்சனையோடு சேர்த்து சொல்லும்போது, "என்னப்பா, அர்ச்சனையில் ஐந்து கிலோமீட்டர்னு எல்லாம் வருது" என்று என் பையன் கேட்டபோது "கொல்" என்று அனைவரும் சிரித்து விட்டோம். பெருமாள் பக்தர்கள் மட்டுமல்லாது அனைவரும் பார்த்து ரசிக்க அழகான இடம் பெருமாள் மலை.

Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar