உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்! (பாகம்-1) இந்த பயண தொகுப்பை தங்களோடு பகிர்வதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு காரணம் இல்லாமலில்லை. கடந்த 2020 ஆண்டு முதலே நம் பாரதத்துக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் தொடர்ந்து எல்லை பிரச்சினை இருந்துகொண்டே தான் இருந்தது. டோக்லாமில் துவங்கி, கிழக்கு லடாக் பகுதிவரையில் மோசமான தாக்குதல்களில் இரு நாடும் ஈடுபட்டு, கணிசமான உயிர்த்தியாகங்களை இருநாடுகளும் சந்தித்தன. கலவரப்பகுதியாகவே இருந்து வந்த இந்த இமய மலைப்பகுதிக்கு இப்போது ஓரளவு தீர்வு கிட்டி உள்ளது என்றே கருதலாம். இரு நாடுகளும், தமது ராணுவத்தை பின்னேற செய்தது நமக்கு நிம்மதியை தந்துள்ளது. ஏற்கனவே இந்தப்பகுதியில், இரு நாடுகளும் பல வளர்ச்சிப்பணிகளை செய்திருக்கிறார்கள் என்பது நிதர்சனம். எனவே இந்த நல்ல தருணத்தில் என்னுடைய பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்வது என்று முடிவெடுத்து இந்த பயண கட்டுரையை துவங்குகிறேன். உங்கள் மேலான ஆதரவுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி பாராட்டுகிறேன். 2019 ம் ஆண்டு வரை, ஒரு மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் யூனியன் மற்றும் லடாக் யூனியன் என்றா...
ஐரோப்பா அழைத்தது (பாகம்-24 ) கண் திறந்திட வேண்டும்!!! முதலில் நாங்கள் தேர்வு செய்த இடம், ஷோம்பிருன் (Schonbrunn ) அரண்மனை. வியன்னா செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் இது முதன்மையானது. ஹாபிஸ்புர்க் ராஜ பரம்பரையின் வெயில்கால இருப்பிடம். இந்த பிரமாண்ட அரண்மனையின் சுற்றிலும் மிகப்பெரிய தோட்டமும் பூங்காவும் உள்ளது. குட்டையான மரத்தில் கொத்து, கொத்தாக ஆரஞ்சு பழங்கள் விளைந்துள்ளன. இந்த அரண்மனையில் உலக புகழ் பெற்ற மொசார்ட் (Mozart ) தன்னுடைய சிம்பொனியை இசைத்ததாக சொல்லப்படுகிறது. நமது இசைஞானி இளையராஜாவும் இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தாராம். அரண்மனையின் சிற்ப வேலைப்பாடுகள், என்னை பிரமிக்க வைத்தது. இரு தலை கொண்ட மனிதன், தன் காதலியோடு நடனமாடுவது போல இருந்த சிலை மிக அற்புதம். இங்கு ஒரு முக்கிய தகவல். வியன்னா சிட்டி டிக்கெட் வாங்கியவர்கள் தனி தனியாக டிக்கெட் வாங்க தேவை இல்லை. வியன்னா ஐரோப்பிய நாடுகளில் மிகவும் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியை தரும் நகரம். இங்கு, வீடு வாடகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆதலால், செலவு குறைவு. பொருட்களும் மலிவாக கிடைக்கிறது. இ...
உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்! (பாகம்-2 ) முக்கிய தகவல். லே-லடாக் செல்லுவதற்கு உகந்த காலம் என்பது மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை. எனவே ஜூன், ஜூலை மாதங்கள் சிறந்தது. உலகத்தின் அதிகப்படியான உயரத்தில் உள்ள விமான நிலையங்களில் முதலில் வருவது "குஷக் பகுளா ரிம்போஷி" விமான நிலையம்தான். தரை மட்டத்துக்கு சுமார் 10500 அடிக்கு மேலே அமைந்துள்ளது லே விமான நிலையம். இந்த விமான நிலையத்துக்கு புது தில்லியிலிருந்தும், மும்பையிலிருந்தும் நேரடி விமானங்கள் உள்ளன. பெரும்பாலும் தூங்கி வழிந்துகொண்டு வரும் பயணிகள் கூட உத்திரகாண்ட், இமாச்சல பிரதேசத்தை விமானம் கடக்கும்போது பரபரப்பாகி மொபில் காமிராவை தயாராக வைத்துக்கொண்டு விமானத்தின் ஜன்னலை நோக்கி தாவுகிறார்கள். வெளியில் கொள்ளை அழகு. கரும்பச்சையில் ஆரம்பிக்கும் இயற்கையின் அழகு, பளீர் வெண்மையில் முடியும். அடர்ந்த மலைக்காடுகள், நடு நடுவே செம்மண் தீட்டியது போன்ற சிகரங்கள், இடை இடையே நீண்டு வீழும், வெண்ணிற அருவிகள், நீல நிறத்தில் தேங்கியுள்ள நீர்த்தேக்கங்கள், இவை யாவும் இமாச்சலப்பிரதேசத்தை தாண்டும் போது மாறுகிறது. மலை சிகரங்களில் திட்டு திட்டாக வெ...
Comments
Post a Comment