வானில் நீந்தும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடக்கும் . காற்றில் ஏறிப் பயணம் செய்ய பாதை அங்கே இருக்கும் . சந்த்ரயானா? சந்த்ராயன்னா ? முதலில் பெயர் விளக்கம். சந்த்ரயான்தான். இந்த வார்த்தை சமஸ்கிருதத்தில்இருந்து வந்தது தான். "சந்திரா" என்றால் நிலா, "யான்" என்றால்வானூர்தி. குழப்பத்தில் ஆழ்த்தியது தொலைக்காட்சியின் பணி. சரி விஷயத்துக்கு வருவோம். இந்த "நிலாஊர்தி" , அட நன்றாக இருக்கிறதே! என்ன செய்யப்போகிறது, எப்படி செயல் படுகிறது, என்பதையெல்லாம் பார்ப்போம். விஞ்ஞான நோக்கம் என்னவென்றால், தொலை ஆய்வின் மூலம், நிலவை தெளிவாக நான்கு விதங்களில் (Visible, near infrared(NIR), low energy X-rays and high-energy X-ray regions) படம் எடுத்து பூமிக்கு அனுப்புவது. விலாவாரியாக சொல்வது என்றால்,நிலவின் நெருங்கிய, மற்றும் தொலைவுப்பகுதியை சுமார் ஐந்து முதல் பத்து மீட்டர் உயரத்தில் இருந்து படம் பிடித்து முப்பரிமாண வரைபடம் தயாரித்து அனுப்புவது. மக்னீசியம், அலுமினியம், சிலிகான், கால்சியம், இரும்பு மற்றும் டைடானியம் போன்ற தாதுக்கள், மேலும் ராடான், யுரானியம், தோரியம் போன்ற கதி...