தியானலிங்கம் பார்க்கலாம் வாங்க!
கோயம்புத்தூர் நகரிலிருந்து கிட்ட தட்ட முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலை சாரலில் அழகான இயற்கை சூழலில் உள்ளது ஈஷா யோக மையம் . வாகனம் செல்லும் பாதையின் இரு புறத்திலும் பாக்கு மரங்கள் , அடர்ந்த காடுகள் . மலைத்தொடரின் மேல் புறத்தில் வெண் நிற போர்வை போர்த்தியது போல அழகான மேகங்கள் .சிறுவாணி அணைக்கு செல்லும் வழியில் வலது பக்கமாக திரும்பி பூண்டி சாலையில் பயணித்தால் வருவது ஈஷா யோக மையம். சிலு சிலுவென காற்று நம் உடலைத்தழுவ யோக மையத்துக்கு சென்றவுடன் நம்மை இனிய முகத்தோடு வரவேற்பது ஈஷா சேவகர்கள் . நம் குடும்பத்தினர் வீட்டுக்கு செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது . நம் பாத அணிகள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். கார் பார்க்கிங், cloak room செலவுகளுக்கு மொத்தமாக விடுதலை அளித்துள்ளார்கள் ஈஷா சேவகர்கள். தியானலிங்கம் கோவிலுக்குள் செல்வதற்குமுன் கோவில் பற்றியும் தியானம் பற்றியும் தெளிவாக விளக்குகிறார்கள். இந்த தியான லிங்கம் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களினால் பிராண பிரதிஷ்...