கடவூர் டூ காத்மாண்டு! (பாகம்-2 )

'தாமஸ் குக்' நான்கு பகல், மூன்று இரவு பேக்கேஜ் என்று முடிவு செய்து, அவர்களை தொடர்பு கொண்டோம் (இவை அனைத்தும் 'தாமஸ் குக்' வலைத்தளத்திலேயோ அல்லது 'மொபைல் ஆப்' மூலமாகவோ செய்ய முடியும்) நபர் ஒருவருக்கு சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும் (சென்னையிலிருந்து காத்மாண்டு விமான சீட்டு உட்பட). ஆக, ஐந்து பேருக்கான தொகை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம். இந்த தொகையில் தொண்ணுறு சதவீதத்தை புக்கிங் செய்யும்போது செலுத்த வேண்டும். 

(குறிப்பு: உங்களிடம் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டு-லவுஞ் சர்வீஸ் இருக்கும் பட்சத்தில் இந்த பயண தொகையை எல்லாம் அந்த கார்டின் மூலம் செலுத்துவது உபயோகமுள்ளது. விமான நிலையத்தில் உள்ள லவுஞ் சேவையை பயன்படுத்தி இரண்டு ருபாய் செலவில் உணவு மற்றும் தங்கும் வசதி முதலியவற்றை பெறலாம்)

நேபாளம், அந்நிய தேசம் என்பதால், நம்முடைய பாஸ்போர்ட், வோட்டர் ஐ.டீ கார்ட், புகைப்படம் போன்றவை தேவை படுகிறது. ஆதார் கார்டு உபயோகமில்லை. இந்த நகல்களை ஈமெயில் மூலமாக அவர்களுக்கு அனுப்ப வேண்டும். மற்றவற்றை அவர்கள் பாத்துக்கொள்வார்கள். நேபாளத்துக்கு செல்ல, நாம் விசா முன்னதாக எடுக்க தேவை இல்லை. விமான நிலையத்தில் நேரடியாக பாஸ்போர்ட்டில் முத்திரை பதிப்பார்கள். இது போன்ற விவரங்களை 'தாமஸ் குக்' நமக்கு முன்னதாகவே தெரிவித்து விடுவதால் எந்த சங்கடமும் இல்லை. இன்னொரு முக்கியமான தகவல். நேபாளத்தில் நம்முடைய இந்திய பணமான ரூபாய் ஓரளவுக்கு செல்லுபடியாகும். ஆனாலும், நாங்கள் சென்ற போது அதிகபட்சமாக நூறு ரூபாய் நோட்டு வரைதான் அனுமதித்தார்கள். தற்போது 'ஐநூறு ரூபாயும் கொண்டு செல்லலாம்' என்ற அறிவிப்பு வந்துள்ளதாக தகவல். ஆக, நூறு ருபாய் தாள்களை  அவசியமாக கொண்டு செல்லவேண்டும். இந்த தாள்களை கொண்டு அந்த ஊர் தாள்களாக மாற்றிக்கொள்ளலாம், க்ரெடிட் கார்ட்-டெபிட் கார்டுகளெல்லாம் காலை வாரிவிடும். 'அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்' என்று நமக்கு அறிவுறுத்தி விடுகிறார்கள்.

இமய மலையாயிற்றே, குளிர் நடுக்கி எடுத்து விடும் என்று நினைத்து கொண்டு விலையுயர்ந்த 'ஜெர்கின், ஸ்வெட்டர்' எல்லாம் கொண்டு செல்ல  தேவை இல்லை. சராசரி பகல் வெப்பம் 20  முதல்  24 தான். இரவு நேரம், சில பகுதிகளில் பத்து. எளிதாக சமாளிக்கலாம். கூடிய வரையில் சுமைகளை குறைத்து கொள்வது சால சிறந்தது. எப்போதும் கைவசம், உங்களுடைய பாஸ்போர்ட் பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியம்.


இந்த தயார் நிலைகளோடு, நாங்கள் ஐந்து பேரும், நடுநிசி (2 :30 ) விமானமான 'சென்னை-மும்பை' 6E 6140 இண்டிகோ விமானத்தை பிடிக்க இரவு 12 மணிக்கு டெரிமினல்-2 சென்றடைந்தோம். நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'கட்டவுட்' நம்மை வரவேற்க, பின்னர் வழக்கமான 'செக்-இன்' விசாரணைகளும், பரிசோதனைகளும் முடிந்த வுடன், அறிவிக்கப்பட்ட வாயிலில் சாய்ந்து உட்கார்ந்து வேடிக்கை பார்த்தோம். 

அந்த நடுநிசி வேளையில், எத்தனை பெண்கள் இந்த விமான நிலையத்தில் பணி புரிகிறார்கள்! என்று எனக்கு ஆச்சர்யமும், பெருமையும் தோன்றியது. துப்புர




வு பணியிலிருந்து, விமான பணி வரையில். இதுதான் நமது பாரதி கனவு கண்ட புதிய பாரதம். தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ நாற்பது சதவீதத்தில் பெண்கள் பணியில் உள்ளார்கள் என்பது நாம் பெருமைப்பட கூடிய விஷயம்தானே.


(தொடரும்) 

Comments

Post a Comment

Popular posts from this blog

Appreciate what you have - Good story