Posts

Showing posts with the label எ Resolution

தேயும் தேசிய விலங்கு (கெளரவம்)

Image
எனக்கு பத்து வயது இருக்கும். என்னையும், என் சகோதரியையும் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு திருச்சி ஜங்க்ஷன் மைதானத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த "ஜெமினி" சர்க்கசுக்கு சென்றார் என் அப்பா. அந்த பசுமையான நினைவு இன்று T.V செய்தி ஒன்றை கேட்டவுடன் வந்தது. அதற்கும் டி.வீ செய்திக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. அந்த சர்க்கஸில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் என்ன தெரியுமா? மிகச்சிறிய முக்காலியில் தன் நான்கு கால்களையும் நெருக்கி வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்த கண்களை கவரும் அந்த ஆறு புலிகள். நடுவில் நின்றிருந்த அந்த ஆசாமி கையிலிருந்த சாட்டையை சுழற்றியதும் தாவிப்பாய்ந்து நெருப்பு வலையத்திருக்குள் நுழைந்தன அந்த புலிகள். கம்பீரமான கர்ஜனையுடன் மீண்டும் முக்காலியில் நின்று கொண்டன. இன்னமும் மெய்சிலிர்க்கும் காட்சி. பிறகு பதினைந்து வருடங்களுக்கு பிறகு நண்பர்களுடன் மைசூர் மிருகக்காட்சி சாலையில் கூண்டுக்குள் அங்கும், இங்கும் ஆவேசமாக அலைந்து கொண்டிருந்த பெரிய வெள்ளைப் புலியைப் பார்க்கும் போதும் சிலிர்த்தது. புலி என்றாலே கம்பீரம் கலந்த அழகு. அதனால்தான் இந்தியாவின் தேசிய விலங்காக புலியை வைத்துள்ளார்க...