உன்னிலே என்னைக்கண்டேன்
தாயே உனைக்கண்ட போதுதான் நான் குழந்தையென உணர்ந்தேன், கதிரே உனைக்கண்ட போதுதான் கண்களை நான் உணர்ந்தேன், பறவையே உனைக்கண்ட போதுதான் எண்ணங்களை நான் உணர்ந்தேன், நண்பனே உனைக்கண்ட போதுதான் தோள்களை நான் உணர்ந்தேன் , பெண்ணே உனைக்கண்ட போதுதான் நான் ஆண் என்பதை உணர்ந்தேன், மகனே உனைக்கண்ட போதுதான் பாசமென்பதை உணர்ந்தேன், தோழியே உனைக்கண்ட போதுதான் உள்ளமென்பதை உணர்ந்தேன், உடலே உனைக்கண்ட போதுதான் நான் உயிர் என்பதை உணர்ந்தேன்.