நான் கடவுள் - பதில் இல்லாத வினாத்தொகுப்பு
உபநிஷதுகளில் வரும் மகா வாக்கியம் "அஹம் ப்ரம்ஹாஸ்மி ", அதாவது 'நான் கடவுள் '. ஒரு மனிதனின் உச்ச நிலையாக சொல்லப்படுவதே இந்த அஹம் ப்ரம்ஹாஸ்மி . இந்த கருவை மனதில் கொண்டு இந்தப்படத்தின் மூலமாக பல கேள்விகளை எழுப்பி உள்ள பாலாவின் நேர்மையான தைரியத்திற்கு பாராட்டு சொல்லியே ஆகவேண்டும் . ' ருத்ரன் ', பதினாலு வருஷங்களுக்கு முன்னால் ஜோசியக்காரரின் சொல்லுக்கிணங்க தாய் , தந்தையரால் கை விடப்பட்டு காசியில் அஹோரிகளுக்கு ' நடுவே வளரும் இளைஞன் . ஆமாம் ! அதென்ன அஹோரி ? என்று நீங்கள் குழம்புவது புரிகிறது . அஹோரிகள் காசியில் உலவும் , ' அஹம் ப்ரம்ஹாஸ்மி ' யை உணர்ந்து வாழும் அசாதாரண துணிச்சல் மிக்க சாமியார்கள் என்றும் , உயிர்களை மறு பிறவியிலிருந்து விடுவிக்க கூடியவர்கள் என்றும் சொல்லப்படுகிறது . ருத்ரனும் ஒரு அஹோரியாக வளர்ந்து விட , திடீரென்று ருத்ரனின் தாய் , தந்தையருக்கு தங்கள் மகனுடைய நினைப்பு வந்துவிடுவதால் , ருத்ரனின் தந்தை மகனைத்தேடி காசியின் வீதிகளில் , மயானங்களில் என்று மூலை மூலையாக திரிகிறார் . நே...