வில்லுடையான் பட்டு கோவில் - நெய்வேலி
வில்லுடையான் பட்டு திருக்கோவில் குடமுழுக்கு விழா 20-04-2009 அன்று நடைபெற இருக்கின்றது . இந்த கோவிலின் சிறப்பு பற்றி இப்போது பார்ப்போம் . சுமார் 500 வருஷங்களுக்கு முந்தையதாக கருதப்படுகிறது இந்த கோவில் . பல்லவர் காலத்தில் உருவமைக்கப்பட்டது இந்த கோவில் மூலவராக திகழும் முருகப்பெருமானின் சிலை . வேறு எந்த ஊரிலும் இல்லாத சிறப்பம்சமாக முருகப்பெருமான் இடது கையில் வில்லுடனும் , வள்ளி தெய்வானையுடனும் திகழ்கிறார் . வள்ளியை திருமணம் செய்வதற்காக குறவர்களுடன் போர் புரிந்து வெற்றி கொண்டு வள்ளியை மணம் முடித்ததாக தல வரலாறு சொல்கிறது . அருணகிரிநாதரின் பாடல்களில் இடம் பெற்றுள்ளது இந்த ஸ்தலம் . பங்குனி உத்திரதிருவிழா இங்கு ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக கொண்டாட படுகிறது . அமைந்துள்ள இடம் : கடலூர் மாவட்டம் , நெய்வேலியில் உள்ளது இந்த கோவில் . சென்னையிலிருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது . இந்த கோவிலின் பராமரிப்பு தேவைகளுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெறும் துணையாக இருக்கிறது . வரும் இருபதாம் தேதி குட ...