Travelogue - Leh, Ladakh

 உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்!

(பாகம்-1)

இந்த பயண தொகுப்பை தங்களோடு பகிர்வதற்கு இவ்வளவு காலம்  ஆனதற்கு காரணம் இல்லாமலில்லை. 

கடந்த 2020 ஆண்டு முதலே நம் பாரதத்துக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் தொடர்ந்து எல்லை பிரச்சினை இருந்துகொண்டே தான் இருந்தது. டோக்லாமில் துவங்கி, கிழக்கு லடாக் பகுதிவரையில் மோசமான தாக்குதல்களில் இரு நாடும் ஈடுபட்டு, கணிசமான உயிர்த்தியாகங்களை இருநாடுகளும் சந்தித்தன. கலவரப்பகுதியாகவே இருந்து வந்த இந்த இமய மலைப்பகுதிக்கு இப்போது ஓரளவு தீர்வு கிட்டி உள்ளது என்றே கருதலாம். இரு நாடுகளும், தமது ராணுவத்தை பின்னேற செய்தது நமக்கு நிம்மதியை தந்துள்ளது. ஏற்கனவே இந்தப்பகுதியில், இரு நாடுகளும் பல வளர்ச்சிப்பணிகளை செய்திருக்கிறார்கள் என்பது நிதர்சனம். எனவே இந்த நல்ல தருணத்தில் என்னுடைய பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்வது என்று முடிவெடுத்து இந்த பயண கட்டுரையை துவங்குகிறேன். உங்கள் மேலான ஆதரவுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி பாராட்டுகிறேன்.


2019 ம் ஆண்டு வரை, ஒரு மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் யூனியன் மற்றும் லடாக் யூனியன் என்றானது அனைவருக்கும் நினைவிருக்கும். வளர்ச்சியில் பின் தங்கியிருந்த லடாக், லெப்டினன்ட் கவர்னரின் மேற்பார்வையில் மத்திய அரசின் உத்தரவின்படி சீரமைக்கப்பட்டு வருகிறது. லே-லடாக் மற்ற இமய மலைத்தொடர்களை போல இயற்கை வளம் கொண்ட பகுதியில்லை. மழை குறைவு, சீதோஷண நிலை குளிர் காலங்களில் படு மோசம். இரவு நேர வெப்பநிலை -25 செலிசியஸுக்கு கீழே. மிக முக்கியமாக நமக்கு இன்றியமையாததாக விளங்கும் பிராண வாயு, ஆக்சிஜன் மிகக்குறைவு. ஆங்காங்கே ஓங்கி உயர்ந்த மலை சிகரங்கள், ஆங்காங்கே ஒரு சில ஊசி இலை மரங்கள், பாலை வனங்கள் (ஆச்சர்யமாக உள்ளதா?) வெந்நீர் ஊற்றுக்கள், மிக பிரமாண்டமான உப்பு ஏரி. சொற்பமான அளவில், பழைமையான புத்தர் மடாலயங்கள் (buddhist monastery ) யாக் எனப்படும் காட்டெருமைகள் கூட்டம். இவைகள் தான் லே-லடாக்கின் பூர்வீக சொத்து என்று சொல்லலாம். பின்னர் எதற்கு, இந்த பகுதிக்கு இவ்வளவு போராட்டம்? இந்த கேள்விக்கு பதில் காண்பது இந்த கட்டுரையின் நோக்கமில்லை.

இனிமேல் நாம் நேராக உலகின் உச்சியான லே-லடாக்கிற்கு பயணிக்கலாம்.


(தொடரும்)


Comments

Popular posts from this blog

Dharbhai - An article by TRS Iyengar

The Garden Fire