Posts

Showing posts with the label thirai vimarisanam

Avatar - Man's creation Vs God's creation

Image
அவதார் - திரை விமரிசனம் ஆஸ்கார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனின் மற்றுமொரு அசத்தல் படம் அவதார். ஒரே மாதிரியான கண்ணோட்டங்கள் கொண்ட 'ஸ்பீஷீஸ்', 'ஏலியன்ஸ்', 'இண்டிபெண்டன்ஸ் டே' போன்ற படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து இருக்கிறார், ஜேம்ஸ் கேமரூன். ஹாலிவுட் படம் என்றாலே பிரம்மாண்டத்துக்கு குறைவு இருக்காது. அந்த வகையில் 'அவதார்' மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கதை இதுதான். பூமியிலிருந்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், போர்வீரர்கள் என ஒரு கும்பல் மாற்று கிரகத்துக்கு பயணித்து அங்கே ஆராய்ச்சிகளை மேற் கொள்கிறது. அங்குள்ள உயிரினங்களையும், மனிதர்களையும் சாமர்த்தியமாக விரட்டி அடித்து விட்டு அங்கே உள்ள வளங்களை அபகரிக்க திட்டமிடுகிறது. பண்டோரா எனப்படுகிற பிரதேசத்தில் உள்ள மனிதர்களின் திறனையும், மற்ற உயிரினங்களினுடைய பலத்தையும் கண்டு வியந்துபோன கும்பல், அவர்களை சாமர்த்தியமாக எதிர்கொள்ள, அவர்களுடைய டீ.என்.ஏ. வை திருடி அதில் பூலோகவாசியின் டீ.என்.ஏ வையும் சேர்த்து அந்த ஜீவன்களை பண்டோரவுக்குள் அனுப்பி வைக்கிறார்கள். முழுக்க, முழுக்க விஞ்ஞான ரீதியாக...

நான் கடவுள் - பதில் இல்லாத வினாத்தொகுப்பு

Image
உபநிஷதுகளில் வரும் மகா வாக்கியம் "அஹம் ப்ரம்ஹாஸ்மி ", அதாவது 'நான் கடவுள் '. ஒரு மனிதனின் உச்ச நிலையாக சொல்லப்படுவதே இந்த அஹம் ப்ரம்ஹாஸ்மி . இந்த கருவை மனதில் கொண்டு இந்தப்படத்தின் மூலமாக பல கேள்விகளை எழுப்பி உள்ள பாலாவின் நேர்மையான தைரியத்திற்கு பாராட்டு சொல்லியே ஆகவேண்டும் . ' ருத்ரன் ', பதினாலு வருஷங்களுக்கு முன்னால் ஜோசியக்காரரின் சொல்லுக்கிணங்க தாய் , தந்தையரால் கை விடப்பட்டு காசியில் அஹோரிகளுக்கு ' நடுவே வளரும் இளைஞன் . ஆமாம் ! அதென்ன அஹோரி ? என்று நீங்கள் குழம்புவது புரிகிறது . அஹோரிகள் காசியில் உலவும் , ' அஹம் ப்ரம்ஹாஸ்மி ' யை உணர்ந்து வாழும் அசாதாரண துணிச்சல் மிக்க சாமியார்கள் என்றும் , உயிர்களை மறு பிறவியிலிருந்து விடுவிக்க கூடியவர்கள் என்றும் சொல்லப்படுகிறது . ருத்ரனும் ஒரு அஹோரியாக வளர்ந்து விட , திடீரென்று ருத்ரனின் தாய் , தந்தையருக்கு தங்கள் மகனுடைய நினைப்பு வந்துவிடுவதால் , ருத்ரனின் தந்தை மகனைத்தேடி காசியின் வீதிகளில் , மயானங்களில் என்று மூலை மூலையாக திரிகிறார் . நே...

Slum dog millionaire - A Proud moment?

Image
மும்பையின் சேரிப்பகுதியில் வளர்ந்த ஜமால் மில்லியனேர் போட்டியில் கலந்து கொண்டுவெற்றி பெற்றது எப்படி? அ. அவன் அறிவாளி ஆ. அவன் புத்திசாலி இ. அவன் ஏமாற்றினான் ஈ. எழுதி வைக்கப்பட்ட விதி. இது தான் படத்தின் கதை. இந்து முஸ்லீம் கலவரத்தில் தாயை இழந்து ஒதுங்கும் இரண்டு குழந்தைகள். இந்த அண்ணன், தம்பிகளோடு மூன்றாவதாக வந்து சேரும் பெண் குழந்தை. மும்பையின் சேரியில் வளரும் இந்த குழந்தைகள் சமுதாயத்தின்தாக்குதல்களில் சிக்கி உதை பட்டு, மிதி பட்டு காயங்களோடு சிரித்துவிளையாடுவது நம் கண்களில் நீரை வரவழைக்கிறது. இவர்களைப்போலநூற்றுக்கணக்கான குழந்தைகள் வலம் வருவதை பார்க்கும்போது நம்மனதுக்குள் பயம் பற்றிக்கொள்கிறது. குழந்தைகளை ஆசை காட்டி அழைத்துச்சென்று அவர்கள்கண்களைப்பிடுங்கி பிச்சைக்கு அனுப்புவது போன்ற சமாச்சாரங்கள் நாம்குழந்தையாக இருந்த போது பெற்றோர்கள் நம்மை மிரட்டுவதற்கு பயன் படுத்தியகதை, இந்தப்படத்தில் நிஜமாக காண்பிக்கிறார்கள். மூன்றாவதாக வந்த பெண்குழந்தை இவர்களிடமிருந்து பிரிந்து போனவுடன் என்ன நிகழும் என்பதை முன்கூடியே ஊகிக்க முடிகிறது. பிச்சையில் ஆரம்பித்து சிறு சிறு திருட்டுகள் நிகழ்த...