Posts

Showing posts with the label தீபாவளி சிந்தனை

தீபாவளி ஸ்பெஷல் - சிந்தனைக்கு

Image
தீபாவளி என்றாலே பட்டாசும், பலகாரமும்தான். இவை இரண்டும் கலந்து சந்தோஷம் தருவது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த முறை பட்டாசு வாங்க வேண்டும்s என்று சொன்ன போது எனது அருமை புத்ரி 'வேண்டாம், வாங்காதே' என்று சொன்னபோது சற்று அதிர்ந்துதான் போனேன். போன வருடம் வரை தன் பங்குக்கு வேண்டியவற்றை தானே தேர்ந்து எடுத்து வாங்கியவள்தான் அவள். இந்த வருடம் அறிவு முதிர்ச்சியின் காரணமாக 'வேண்டாம்' என்று சொல்வதிலும் காரணம் இருக்கிறது. பட்டாசுகள் வெளிப்படுத்தும் புகையினால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புதான். காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடின் அளவு நூறு மைக்ரோக்ராம் இருக்கவேண்டும் என்பது தான் அளவு. ஆனால் தீபாவளி தினத்தன்று இந்த அளவு இருநூற்று ஐம்பதை தாண்டுகிறதாம். இன்னும் சில இடங்களில் இந்த அளவு நானூற்று ஐம்பதை தாண்டுகிறதாம். இதனால் ஆஸ்த்துமா உள்ளிட்ட சுவாசம் சம்பத்தப்பட்ட நோய்கள் அதிகரிக்கும் சூழல் உண்டாகும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் பாதிக்கப்படுவார்கள் என்ற சமாளிப்பு வார்த்தைகள் அவளை சமாதானப்படுத்தவில்லை. "பட்டாசு தொழிலில் பெரும்பாலும...