Posts

கடவூர் டூ காத்மாண்டு! (பாகம்-8)

இரண்டாம் நாள் பயணம் இனிதே முடிந்தது. அன்று இரவு எப்படியோ நேபாளி ஸ்பெஷல் அயிட்டமான “மோமோ” வை ருசி பார்த்துவிடுவது என்று தீர்மானித்தோம். நல்ல வேளையாக அது நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே கிடைத்து விட்டது. ஆனாலும் தாய் “மோமோ”வுக்கு ஈடு இல்லை. கொஞ்சம் “சப்” என்று இருந்ததுபோல் தோன்றியது. எனினும், அந்த ஊர் உணவை சாப்பிடுவது ஒரு சுகம்தான். அன்றைய பொழுதை கழித்து விட்டு மறுநாள் காலை அடுத்த சுற்றுலாதலமான ‘பக்தபூர்” செல்ல தயாரானோம். எங்களுக்கு முன்னதாகவே எங்கள் கார் தயாராக இருந்தது. ஐந்து பேரும் எங்களை வண்டியில் நுழைத்து கொண்டவுடன் “போலாம் ரைட்” என்று கிளம்பினோம். இன்றும் காலையிலேயே ஏராளமான வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. அரை மணிநேரம் கழித்து பக்தபூர் வந்து சேர்ந்தோம். இந்த முறை தயாராக நேபாளி கரன்சியை எடுத்து கொண்டு சற்றே நிம்மதியாக ஊருக்குள் காலை வைத்தோம். “அடடா, எவ்வளவு புத்திசாலி” என்று சொல்லுகிறீர்களா, கொஞ்சம் பொறுங்கள்.  முதலில் நாங்கள் பார்த்த இடம், நேவாரி மொழியில் “லுண்டி அஜிமா” என்று அழைக்கப்படும் இந்திராயணி கோயில். எட்டு அன்னை தேவிகளில் ஒருவர். பக்தாபூர் தர்பாரின் வடமேற்கில், ஒரு சிறிய ...

கடவூர் டு காத்மாண்டு! (பாகம்-7)

Image
நேற்றைய தினம் நேபாளத்தில் நிகழ்ந்த அந்த துயரமான இயற்கை பேரழிவு சம்பவம் எனது நெஞ்சத்தை உலுக்கியது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஏன் இந்த தேசத்திற்கு மட்டும் இவ்வளவு சோக நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன? என்ற கேள்வியோடு இந்த தொடர் கட்டுரையை எழுதுகிறேன். நாங்கள் அடுத்து பயணம் செய்த இடம், ஸ்வயம்பு மகாசைத்யா. காத்மாண்டு பள்ளத்தாக்கின் பரந்த காட்சியைத் தழுவியபடி, மரங்கள் அடர்ந்த குன்றின் உச்சியில் “ஸ்வயம்பு மகாசைத்யா” அமைதியாக எழுந்து நிற்கிறது. நேபாள மக்கள் அன்புடன் “குரங்கு கோயில்” என்று அழைக்கும் இத்தலம், வரலாற்றுச் சின்னம் மட்டுமல்ல; புராணமும் பக்தியும் உயிரோடு நடமாடும் புனிதமான இடம். உச்சியை நோக்கி ஏறத் தொடங்கும்போது, 365 கல் படிக்கட்டுகள் நம்மை வரவேற்கின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளையும் குறிக்கும் இந்தப் படிகள், உடலை மட்டுமல்ல, மனதையும் மெதுவாக உயர்த்துகின்றன. வழியெங்கும் வண்ணமயமான பிரார்த்தனைக் கொடிகள் காற்றில் படபடக்க, பழமையான கல் சிற்பங்கள் காலத்தின் கதைகளைச் சொல்கின்றன. இடையிடையே தோன்றும் குறும்புக்கார ‘ரீசஸ்’ என்ற குரங்குகள் சுற்றித் திரிகின்றன “...

கடவூர் டூ காத்மாண்டு!! (பாகம்-6)

பௌத்தநாத் கோவில் சுற்றி உள்ள கடைகளில் ஒன்றில் நேபாளி தொப்பி ஒன்றை இரு நூறு ரூபாய்க்கு வாங்கி, கொடுப்பதற்கு பணம் இல்லாமல் தவித்து பின்னர், ATM தேடி அலைந்து ஒரு வழியாக பணத்தை எடுத்து கொடுத்து விட்டு “போதுமடா சாமி” என்று ஆகிவிட்டது.  அடுத்து நாங்கள் சென்ற இடமும் மிகப்பிரபலமானது. அதன் பெயர்  படான் தர்பார் சதுக்கம். படான் தர்பார் சதுக்கம், யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரியத் தலமாகவும், நேவாரி கட்டிடக்கலையின் மிகச்சிறந்த படைப்பாகவும் திகழ்கிறது. நேபாளத்தின் லலித்பூரில் அமைந்துள்ள இது, மல்ல வம்ச காலத்தில் கட்டப்பட்ட பழமையான அரச முற்றங்கள், புனிதமான இந்து மற்றும் பௌத்த ஆலயங்கள் மற்றும் 16 முதல் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நேர்த்தியான கல், மரம் மற்றும் உலோகச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. இதன் அனேக விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நமக்கு நிச்சயமாக ஒரு உள்ளூர் வழிகாட்டி தேவை. அதற்கு அலைய தேவையில்லை. கட்டணம் வசூலிக்கப்படும் இடத்தில் அரசு அனுமதி பெற்ற ஆங்கிலம் பேசும் ‘கெய்டு’கள் இருக்கிறார்கள். இரண்டாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். மூன்று மணி நேரத்தில் முழுவதும் சுற்றி காட்டி வி...

கடவூர் டு காத்மாண்டு! (பாகம் - 5)

Image
பசுபதிநாத் கோயிலில் ஒரு பண்டிதரை கொண்டு ஓரிரு சிவ, காலபைரவ வழிபாடுகளை முடித்துக்கொண்டு பின்னர் பசுபதிநாதரை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு எங்கள் அடுத்த ஸ்தலமான பௌத்தநாத் மடாலயத்துக்கு சென்றோம்.  பௌத்தநாத் கோவில், மிகப்பெரிய கோள வடிவ ஸ்தூபியை கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பௌத்த கோயிலாகவும், யுனெஸ்கோவின் பாதுகாப்பு பெற்ற பாரம்பரிய தலமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. இதன் ஸ்தூபியின் நான்கு திசைகளிலும் இரண்டு பெரிய கண்கள் வரையப்பட்டிருக்கிறது. இந்த கண்கள் அறிவையும், ஆற்றலையும் சித்தரிப்பதாக நம்பப்படுகிறது. புத்த கோயிலின் வடிவ அமைப்பை பல்வேறு மண்டலங்களாக உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது, ஒரு “ட்ரோன்” கேமராவினால் உச்சியிலிருந்து பார்த்தால் எப்படி தெரியுமோ, அதைதான் மண்டலங்கள் என்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட, நமது இந்து கோயில்களில் நான்கு பிராகாரங்கள் என்று சொல்கிறோமல்லவா! அதே போலத்தான் மண்டலங்களும். மனித வாழ்வில் நாம் பல கட்டங்களை கடந்து சென்று முடிவில் இறைவனை அடைகிறோம் என்று இந்து சமயமும், நிர்வாணநிலையை அடைகிறோம் என்று பௌத்த சமயமும் சொல்கிறது....

கடவூர் டு காத்மாண்டு! (பாகம்-4 )

Image
பபெரா ஓட்டலில் காலை உணவு மட்டும் இலவசம் (காம்ப்ளிமென்ட்டரி), ஆதலால் முதல் நாள் இரவு சிற்றுண்டியை பபேராவிலேயே, ஒரு மணிநேர காத்திருப்புக்கு பின் உண்டு களித்தோம். நேபாள் உணவு முறையில் நிறைய 'தாய்' ஐட்டங்கள் இருக்கிறது. எல்லாவிதமான 'மோ-மோ' வும் கிடைக்கிறது. இனிப்பு வெஜ் ரைஸ் (அநேகமாக காஷ்மீரி வகை), சப்பாத்தியும், தோசையும் சர்வதேச உணவாகிவிட்டதால் எங்கும் கிடைக்கும். ஹோட்டலில் மேல் தளத்தில் உள்ள டைனிங் ஹால் என்பதால், மலைத்தொடர்களை ரசித்துக்கொண்டே இயற்கை காற்றையும் வாங்கிக்கொண்டே சாப்பிட முடிந்தது. இதெல்லாம் நம்ம ஊரில் முடியுமா? செயற்கை குளிரூட்டப்பட்ட அறை, அல்லது மாசுபட்ட காற்றுடன் கூடிய வெளி சூழல் என்றே பழகிவிட்டோம் இல்லையா? வருடத்துக்கு ஒரு முறையாவது இது போன்ற இடங்களுக்கு சென்று இயற்கையை ரசிக்க வேண்டும் என்று உறுதி மேற்கொண்டேன்.  இமய மலைப்பகுதியாதலால், இருள் சூழ எட்டு மணியாகிறது. அதே போலவே காலை பொழுதும் சீக்கிரமே விடிந்து விடுகிறது. முதல் நாள் தூக்கமின்மையால், அன்று இரவு அருமையான தூக்கம் சொக்கியது. காலைபொழுதும் சீக்கிரமே வந்து விட, இரண்டாம் நாள் பயணத்துக்கு தேவையானவற்றை அள்...

கடவூர் டு காத்மாண்டு!! (பாகம்-3 )

Image
விடியல்காலை நாலரை மணிக்கு மும்பை விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். தூக்கக்கலக்கம் இருந்ததால், அவரவர்கள் ஒரு சாய்வு நாற்காலியை பிடித்து வழுக்கியபடியே இளைப்பாறினோம். எங்களுக்கு காத்மாண்டு செல்லும் அடுத்த விமானம் 11 :30 க்கு தான் என்பதால் நிதானமாக காலைக்கடன்களையும் சிற்றுண்டியையும்  முடித்துக்கொண்டு அறிவிக்கப்பட்ட வாயிலுக்கு சென்றடைந்தோம். விமானம் 'ஹவுஸ் புல்.' யாத்திரிகர்கள் சிலரும், இடம்பெயந்தோர் பலரும் விமானத்தை நிரப்பியிருந்தனர். நேபாளத்துக்கு இவ்வளவு இடம்பெயந்தோரை நான் எதிர்பார்க்கவில்லை. பணி நிமித்தமாக இந்தியாவுக்கு நேபாளிகள் நிறையபேர் வந்து போகிறார்கள் என்பது கண்கூடாக பார்க்க முடிந்தது.  நாங்கள் பயணித்த 6 E 1157 இண்டிகோ விமானம் இரண்டரை மணிநேரம் சிறகடிக்க பிறகு, சில நிமிடங்கள் முன்னதாகவே, 'த்ரிபுவன் சர்வதேச விமான' நிலையத்தை அடைந்தது. இமய மலையின் அழகை மேலிருந்து ரசிப்பது ஒரு அழகுதான் என்றாலும், மேகமூட்டம் அதை தடுக்கத்தான் செய்தது. 'சர்வதேச விமான நிலையமாயிற்றே!' என்றெல்லாம் கற்பனை கோட்டை கட்ட வேண்டாம். மிக சிறிய நமது இரண்டாம் நிலை நகரங்களின் விமான நிலையம் அள...

OTT Movie review "Thiru Manikam"

Image
 சமீபத்தில் "திரு.மாணிக்கம்" என்று ஒரு திரைப்படத்தை OTT ல் பார்த்தேன். 'சமுத்திரக்கனி' நடித்தபடம் என்பதால் எனக்கு ஒரு ஈர்ப்பு தன்னிச்சையாகவே இருந்ததது. இந்த படம் Z5 ல் வெளிவந்துள்ள படம். சுய-தர்மத்தை பற்றிய கதை. இந்த காலத்தில் இப்படி ஒரு படமா! என்று என்னை ஆச்சார்யத்தில் ஆழ்த்தியது.  மாணிக்கம், ஒரு சாதாரண குடும்பஸ்தர். குமுளியில் ஒரு 'லாட்டரி சீட்டு' வியாபாரம் செய்யும் கடை வைத்திருக்கிறார். மனைவி, இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தைக்கு பேச்சுகுறைபாடு. திக்குவாய்ப்போல. அனைத்து நடுத்தர குடும்பத்தினருக்கும் உள்ளது போலவே இவர் குடும்பத்துக்கும் சில பொருளாதார சிக்கல்கள். மனைவியின் முழு ஒத்துழைப்போடு சவால்களை எதிர் கொள்கிறார். இவருடைய கடைக்கு ஒரு முதியவர் (பாரதிராஜா) வருகிறார். அவருக்கும் பல பொருளாதார சிக்கல்கள். நிறைமாத கர்ப்பிணியான தன்னுடைய மகளை, வரதட்சிணையை காரணம் காட்டி விரட்டி விட்டு, தன் மகனுக்கு வேறு ஒரு பெண்ணை மணம் முடிக்க முயலும் முதியவரின் சம்பந்தி. இந்நிலையில் மாணிக்கத்தின் கடையில் லாட்டரி சீட்டு வாங்குகிறார் அந்த முதியவர். சீட்டுக்கு பணம் கொடுக்க தன...