
ஐரோப்பா அழைத்தது (பாகம்-25 ) உண்மை நின்றிட வேண்டும்!!! ஓம்! ஓம்! ஓம்! கடந்த 24 பாகங்களின் மூலம் என்னுடைய ஐரோப்பிய பயணத்தின் சில சுவையான, உபயோகமுள்ள அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். இந்த 25 வது பாகமானது இந்த உரையாடலின் கடைசி அத்தியாயம். இதில், வியானாவிலிருந்து மீண்டும், பிராங்கபார்ட் வந்த அனுபவமும், ஏற்கனவே கூறிய சில முக்கிய தகவல்களின் தொகுப்பும் தரவுள்ளேன். ஏர் பீ என் பீயை காலை செய்துவிட்டு மீண்டும் சாவியை அந்த பெட்டியிலே வைத்துவிட்டு மாலை ஐந்து மணிக்கே கிளம்பிவிட்டோம். ரயில் 10 மணிக்கு தான். அது வரை கையில் உள்ள பெட்டிகளை வைக்க ஒரு தனியார் சாமான்கள் வைக்கும் அறையை வாடகைக்கு எடுத்து, பொருட்களை வைத்து விட்டு, வியன்னா சாலையோர பஸாருக்கு சென்று 'டி' ஷர்ட்டுகள், பொம்மைகள், என்று சிலவற்றை வாங்கினோம். அங்கிருந்த பெரும்பாலான பொம்மைகளில் 'மொசார்ட் ' இசைகொண்ட சிறு சிறு இசைக்கருவிகள்தான் அதிகம். மொசார்ட் இசையை தனது அடையாளமாகவே கொண்டுள்ளார்கள் அந்த நாட்டினர். அந்த பஸாரில், பஞ்சாபை சேர்ந்த சிலர் கடைகள் வைத்துள்ளார்கள். தேவைப்பட்டவை எல்லாம் வாங்கி கொண்டு, வாடகைக்கு வைத்துவிட்ட...