அன்பரே, வணக்கம். இந்த இணைய வலைக்குள் உங்கள் அனைவரையும் சிக்க வைக்கும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் என்னை உங்களுக்கு அறிமுகம்செய்வதில் மகிழ் கிறேன்.
ஐரோப்பா அழைத்தது (பாகம்-23 ) மண் பயனுற வேண்டும்!!! பஞ்சாபி ஹோட்டலில் இரவு உணவை முடித்துக்கொண்டு நாங்கள் செல்லவேண்டிய 'ஏர் பீ என் பீ' விடுதியான வீட்டிற்கு டிராம் பிடித்து சென்றோம். அது என்ன 'ஏர் பீ என் பீ' என்று கேட்கிடீர்களா? இது ஒருவகையான பயணிகள் தங்கும் விடுதி என்றே கூறலாம். இது போன்ற வசதிகள் இப்போது இந்தியாவில் கூட வந்து விட்டது. அதாவது, சில பணவசதி படைத்தவர்கள், தனக்கு சொந்தமான வீட்டை, சகல வசதிகளையும் செய்து கொடுத்து வாடகைக்கு விடுவதுதான் 'ஏர் பீ என் பீ'. இந்த வீடுகள், நாள் வாடகை தொடங்கி, மாத வாடகை வரை கிடைக்கும். இந்த வீட்டை கிட்ட தட்ட நம் சொந்த வீட்டை போன்றே பயன்படுத்தலாம். மளிகை சாமான்களை வாங்கி கொண்டு சமையல் செய்து சாப்பிடலாம், துணி மணிகளை துவைத்து காய போடலாம், இல்லாவிட்டால் என்னை போன்ற சோம்பேறிகள், சும்மா தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்தலாம். வாடகையில் பெரிய வித்தியாசம் இருக்காது, ஆனால், ஹோட்டலில் உள்ள கூட்டம் இருக்காது. இங்கு ஒரு தகவல். ஏர் பீ என் பீயை ஆன்லைனில், பதிவு செய்யும்போது, அந்த வலைத்தளம் நேர்மையானது தானா? என்று தெரிந்து கொண்டு பதிவு செய்யவேண்...
we know u.....let the whole world know ..........
ReplyDeletei am happy to be associated with such a multifaceted human...
Hi Thambi
ReplyDeleteKeep blogging.The world stands to salute your hidden potential.
Wishing u all the best.
Sridhar Sathya Gokul Sruthi.